For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் 20 கி.மீ நடைப் போட்டி... இந்திய வீராங்கனைகள் 2 பேரும் ஏமாற்றம்

ரியோ: ரியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் 20 கி.மீ நடைப் போட்டியில் இந்திய வீராங்கனை குஷ்பிர் கெவுர் 54-வது இடத்தைப் பிடித்தார். இதேபோல மற்றொரு இந்திய வீராங்கனை சப்னா புனியா போட்டியை நிறைவு செய்யவில்லை.

பிரேசிலில் ரியோ ஒலிம்பிக்ஸ் நரடைபெற்று வருகிறது. ரியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் 20 கி.மீ நடைப் போட்டியில் இந்தியாவின் சார்பில் வீராங்கனைகள் குஷ்பிர் கவுர் மற்றும் சப்னா புனியா கலந்து கொண்டனர்.

Rio

இதில் குஷ்பிர் கவுர் 1 மணி 40 நிமிடம், 33 வினாடிகளில் இலக்கை எட்டினார். இதன் மூலம் அவரால் 54-வது இடத்தையே பெற முடிந்தது. இதேபோல இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை சப்னா புனியா இலக்கை எட்டாமல் போட்டியை நிறைவு செய்தார்.

இப்போட்டியில் சீன வீராங்கனை ஹாங் லியூ(1:28:35) முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார். இரண்டாவது இடம் பிடித்த மெக்ஸிகோவின் மரியா குவாடலூப்(1:28:37) வெள்ளிப்பதக்கத்தையும், மூன்றாம் இடம்பிடித்த சீன வீராங்கனை ஷியூசி லியூ (1:28:42) வெண்கலமும் வென்றனர்

Story first published: Saturday, August 20, 2016, 10:19 [IST]
Other articles published on Aug 20, 2016
English summary
Khushbir Kaur has finished 54th in 20km racewalk with a time span of 1:40:33 while Sapna Punia has failed to complete her event
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X