Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'தங்கமகன்' தங்கவேலுக்கு குவியும் பாராட்டு ... கிடைக்குமா பிஎம்டபிள்யூ கார்? #MariyappanThangavelu

டெல்லி: ரியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி முதல் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாரா ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் புதன்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 18ம்தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன.

இன்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார்.வருண் சிங் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தையும் வென்றார்.

பிரணாப் முகர்ஜி

பதக்கம் வென்று சாதனை படைத்த வீரர்களுக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

வீரேந்திர ஷேவாக் பாராட்டு

கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் மாரியப்பன் தங்கவேலுவிற்கும், வருண்சிங்கிற்கும் பாராட்டுக்களை பதிவு செய்துள்ளார். பி.வி.சிந்துவைப் போல இந்த வீரர்களையும் பெருமைப்படுத்துக்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அர்விர்ந் கெஜ்ரிவால்

வீரேந்திர ஷேவாக்கின் பாராட்டு பதிவு குறித்து கருத்து கூறியுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வெற்றி பெற்ற வீரர்களுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசாக கொடுப்பீர்களா என்று கேட்டுள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி

எப்.எம். ரேடியோ ஜாக்கி பாலாஜி, தனது பதிவில், இன்று காலை எழும்போதோ மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டுக்கொண்டு எழுந்தேன். தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவிற்கும், வெண்கலம் வென்ற வருண் சிங்கிற்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

அனுபம் கெர்

பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பதக்கம் வென்று சாதனை படைத்த வீரர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

பரிசுகள் கிடைக்குமா?

பரிசுகள் கிடைக்குமா?

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி, வெண்கலம் வென்ற வீரர்கள் பி.வி. சிந்து, சாக்ஷி போல பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம், வெண்கலம் வென்ற வீரர்களுக்கும் கார் உள்ளிட்ட பரிசுகள் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி விளையாட்டு ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

Story first published: Saturday, September 10, 2016, 12:57 [IST]
Other articles published on Sep 10, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+