Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாரா ஒலிம்பிக்: நீச்சல் போட்டியில் சுயாஷ் நாராயண் அரையிறுதியில் தோல்வி #paralympics 2016

ரியோ: பாரா ஒலிம்பிக் போட்டியின் 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் சுயாஷ் நாராயண் யாதவ் இறுதிச்சுற்று வாய்ப்பைத் தவற விட்டுள்ளார்.

ரியோ ஒலிம்பிக் 2016 அண்மையில் முடிந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் சில தினங்களுக்கு முன்னர் பிரேசிலில் தொடங்கின. இதில் 23 விளையாட்டுகளில் 528 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் 162 நாடுகளில் இருந்து 4300 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Rio paralympics: Suyash Narayan Yadav fails to reach final

இந்தியா சார்பில் 10 விளையாட்டுகளில் பங்கேற்க 2004ம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கம் வென்ற தேவேந்திரா ஹஜ்ஹாரியா உட்பட 19 வீரர் வீராங்கனையில் பிரேசில் சென்றுள்ளனர்

ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பாக சுயாஷ் நாராயண் யாதவ் பங்கேற்றார். அரையிறுதிக்குச் சென்ற அவர் 9வது இடத்தைப் பிடித்தார்.

முதல் 8 இடங்களைப் பிடித்தவர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய நிலையில், சுயாஷ் நூலிழையில் இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்துள்ளார். இவர் இரண்டு கைகளையும் இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, September 10, 2016, 11:08 [IST]
Other articles published on Sep 10, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+