Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பைக் கால்பந்து தோல்வி எதிரொலி: அர்ஜென்டினாவில் கலவரம்

பியூனஸ் அயர்ஸ்: பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா தோல்வியடைந்ததை தொடர்ந்து ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதையடுத்து 60 ரசிகர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜென்டீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 24 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை கைப்பற்றியது ஜெர்மனி.

அர்ஜென்டினா ரசிகர்கள்

அர்ஜென்டினா ரசிகர்கள்

இதனையடுத்து அர்ஜென்டினாவில் கால்பந்து ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். மூன்றுமணிநேரத்திற்கும் மேல் நீடித்த இந்த கலவரத்தில் ரசிகர்கள் கண்ணாடிகளை உடைத்தும், தீவைத்து எரித்தும் நாசப்படுத்தினர்.

60 ரசிகர்கள் கைது

60 ரசிகர்கள் கைது

அப்போது அங்கு வந்த போலீசார், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி ரசிகர்களைக் கலைத்தனர். இதில் பொதுமக்களும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 60க்கும் மேற்பட்ட ரசிகர்களைப் போலீசார் கைது செய்தனர்.

பிரேசில் – அர்ஜென்டினா ரசிகர்கள் மோதல்

பிரேசில் – அர்ஜென்டினா ரசிகர்கள் மோதல்

இதனிடையே அர்ஜென்டினாவின் தோல்வியை கேலி செய்ததாக ரியோடி ஜெனிரோவில் பிரேசில் ரசிகர்களும் அர்ஜென்டினா ரசிகர்களும் மோதலில் ஈடுபட்டனர். இது கலவரமாக மாறியது.

பதிலுக்குப் பதில்

பதிலுக்குப் பதில்

உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் ஜெர்மனி அணியிடம் பிரேசில் 1-7 என்ற கோல்கணக்கில் மோசமான தோல்வியைத் தழுவியது. அப்போது அர்ஜென்டினா ரசிகர்கள் பிரேசில் ரசிகர்களை கேலி செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு பதிலடியாகவே இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அர்ஜென்டினா அணியை பிரேசில் ரசிகர்கள் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதுவே பின்னர் மோதலாக மாறியதாக கூறப்படுகிறது.

70000 ரசிகர்கள்

70000 ரசிகர்கள்

ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற இறுதிப்போட்டியைக் காண 70000 அர்ஜென்டினா ரசிகர்கள் குவிந்திருந்தனர். தங்கள் அணி கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையில் அர்ஜெர்டினா வீரர்களைப் போல உடையணிந்த அவர்கள் ஒவ்வொரு முறையும் வீரர்களை உற்சாகப்படுத்தினர். இறுதியில் தங்கள் நாட்டு அணி தோல்வியடைந்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மோசமான தோல்வி

மோசமான தோல்வி

உலக கோப்பை போட்டியை நடத்திய பிரேசில் அணி அரையிறுதியில் 1 - 7 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் மோசமாக தோற்றது. பிரேசில் கால்பந்து வரலாற்றில் இது மிகவும் மோசமான தோல்வியாகும். மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியிலும் பிரேசில் தோல்வியடைந்தது.

கடுமையான விமர்சனம்.

கடுமையான விமர்சனம்.

இதனால் அந்நாடே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ரசிகர்கள், ரசிகைகள் கண்ணீர் விட்டு கதறினர். அந்நாட்டு பத்திரிகைகள் மிகவும் அவமானம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு பிரேசில் வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்தன.

தீவைத்த ரசிகர்கள்

தீவைத்த ரசிகர்கள்

இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரேசில் கால்பந்து ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சாபாவ்லோ நகரில் பயணிகள் பஸ்களை தீ வைத்து எரித்தனர். 20 பேருந்துகளுக்கு தீ வைத்தனர். இதில் 3 பேருந்துகள் முழுமையாக எரிந்து விட்டன. மேலும் பல பேருந்துகள் கல்வீச்சில் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, July 14, 2014, 12:09 [IST]
Other articles published on Jul 14, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+