Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னப்பா இது நிருபர்களுக்கு வந்த சோதனை.. ஒலிம்பிக் கவரேஜுக்கு ரோபோக்களை களமிறக்கிய பிரபல பத்திரிகை

வாஷிங்டன்: ரிப்போர்ட்டர்களுக்கு பதிலாக ரோபோக்களை வைத்து ஒலிம்பிக் போட்டி கவரேஜ் செய்கிறது அமெரிக்காவின் முன்னணி நாளிதழான வாஷிங்டன் போஸ்ட்.

ஒலிம்பிக் நடைபெறும் பிரேசிலில் தனது நிருபர் குழுவை களமிறக்கியுள்ளது வாஷிங்டன் போஸ்ட். இதுதவிர ஹெலியோக்ராப் என்ற பெயரிலான ரோபோ நிருபர்களையும் வாஷிங்டன் போஸ்ட் களமிறக்கியுள்ளது.

டிவிட்டர், பேஸ்புக், லைவ் பேஜ் போன்றவற்றில் அவ்வப்போது பதக்க பட்டியல் குறித்த விவரங்களை நேரடியாக அப்லோடு செய்யும் இந்த ரோபோக்கள்.

குழப்பம் வந்தால் அலர்ட்

குழப்பம் வந்தால் அலர்ட்

ஒருவேளை பதக்க பட்டியல், வெற்றி-தோல்வி விஷயங்களில் குழப்பம் இருப்பின் தலைமையகத்திற்கு ரோபோக்கள் தகவலும் தெரிவிக்குமாம்.

டிவிட்டர்

டிவிட்டர்

தினமும் டிவிட்டரில் 600க்கும் மேற்பட்ட அப்டேட்களை இந்த ரோபோக்கள் செய்ய உள்ளன. இவற்றை செவி வழியில் கேட்க அமேசான் எக்கோ நிறுவனமும் உதவுகிறது.

சரிபார்க்க குழு

சரிபார்க்க குழு

பிளாக்கில் தகவல் ஏறியபிறகு, அதில் தவறு உள்ளதா என்பதை, வாஷிங்டன் தலைமையகத்திலுள்ள விளையாட்டு பிரிவு ஆசிரியர் குழு செக் செய்து பார்க்குமாம்.

ஏற்கனவே

ஏற்கனவே

இதுபோல ரோபோக்களை வைத்து செய்தி சேகரிப்பது என்பது இது முதல் முறை கிடையாது. ஜூன் மாதத்தில் மைனர் பேஸ்பால் போட்டித்தொடரை, ஏ.பி செய்தி ஏஜென்சி நிறுவனம் இப்படி ரோபோக்களை வைத்து கவர் செய்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, August 6, 2016, 15:20 [IST]
Other articles published on Aug 6, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+