Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கு புற்றுநோய், ஓய்வில் செல்கிறேன்.. ரோமன் ரெய்ன்ஸ் அறிவிப்பு..ரசிகர்கள் அதிர்ச்சி

Recommended Video

Roman Reigns-க்கு கேன்சர்... தெரியாத சில தகவல்கள்- வீடியோ

நியூயார்க் : பிரபல WWE ரெஸ்லிங் வீரரான ரோமன் ரெய்ன்ஸ் தனக்கு புற்றுநோய் இருப்பதாக கடந்த "ரா" நிகழ்ச்சியில் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.

ரோமன் ரெய்ன்ஸ் தற்போது யுனிவர்சல் சாம்பியனாக இருக்கிறார். எனவே, தன் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் விட்டுக் கொடுத்து விட்டு ஓய்வில் செல்வதாக அறிவித்துள்ளார்.

தன் ரெஸ்லிங் பயணம் இத்தோடு முடிந்து விடவில்லை தான் மீண்டும் வருவேன் என்றும் அவர் கூறினார்.

முக்கிய வீரர்

முக்கிய வீரர்

WWE ரா மற்றும் ஸ்மேக்டவுன் நிகழ்ச்சிகளில் தோன்றும் பல்வேறு ரெஸ்லிங் நட்சத்திரங்களில் முன்னணி வீரர் ரோமன் ரெய்ன்ஸ் ஆவார். பல முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அவர் கடைசியாக யுனிவர்சல் சாம்பியன் பட்டம் வென்றார். ஜான் சீனாவுக்கு அடுத்து WWE நிகழ்ச்சியின் முகமாக ரோமன் இருந்து வருகிறார்.

புற்று நோய் பாதிப்பு

புற்று நோய் பாதிப்பு

33 வயதாகும் இவர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் லுகிமியா எனப்படும் ரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜை புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனினும், அதை மருந்துகள் கொண்டு சமாளித்து வந்துள்ளார்.

நான் மீண்டு வருவேன்

நான் மீண்டு வருவேன்

தற்போது 11 ஆண்டுகள் கழித்து புற்றுநோய் அவருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்த துவங்கி உள்ளது. எனவே, நீண்ட கால ஓய்வு மற்றும் சிகிச்சையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ரோமனுக்கு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி கூறிய அவர், "நான் இனிமேல் சாம்பியனாக இருக்க முடியாது. நீங்கள் யாரும் எனக்காக வருத்தப்பட வேண்டாம். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இது நான் ஓய்வு பெறும் பேச்சு அல்ல. நான் நிச்சயம் மீண்டு வருவேன். இது பட்டம் வெல்வது பற்றியோ, உச்சத்தில் இருப்பது பற்றியோ அல்ல, இது முற்றிலும் ஒரு நோக்கத்துக்காக தான்" என கூறினார். WWE நிறுவனமும், இவர் நீண்ட கால ஓய்வில் செல்வதாக அறிவித்துள்ளது.

ரோமன் ரெய்ன்ஸ் குடும்பம்

ரோமன் ரெய்ன்ஸ் குடும்பம்

ரோமன் ரெய்ன்ஸ் என அறியப்படும் ஜோ அநோவாய், பிரபல ரெஸ்லிங் குடும்பத்தை சேர்ந்தவர். இவரது குடும்பத்தினர், உறவினர் பலரும் ரெஸ்லிங் நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளனர். முக்கியமாக தற்போது ஹாலிவுட்டில் நடிகராக கலக்கி வரும் ரெஸ்லிங் வீரர் தி ராக் என்கிற ட்வயன் ஜான்சன் இவரது உறவினர் ஆவார். மேலும், உசோஸ், ரிகிஷி, டோங்கா கிட், யோகோசுனா, உமாகா ஆகியோரும் இவரது உறவினர்களே.

Story first published: Tuesday, October 23, 2018, 11:15 [IST]
Other articles published on Oct 23, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+