ரோஸ்.. ரோஸ்.. ரோஸ்... அழகான ரோஸ்தான்... அழகான ரோஸ்க்கு ரோஜாக்கூட்டம் பரிசு
மும்பை : இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா -நடாஷா ஸ்டான்கோவிக் ஜோடி தங்களது முதல் குழந்தையை கடந்த வியாழக்கிழமை பெற்றெடுத்துள்ளது.
Recommended Video
கடந்த சனிக்கிழமை தன்னுடைய குழந்தையை சமூகவலைதளம் மூலம் அறிமுகப்படுத்திய ஹர்திக் பாண்டியா, குழந்தைக்கு டயாப்பர் வாங்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளதை இன்ஸ்டா மூலம் தெரிவித்தார்.
இந்நிலையில், குழந்தை பிறந்தபிறகு முதல் முறையாக நடாஷா ஸ்டான்கோவிக்குடன் புகைப்படம் எடுத்து அவர் வெளியிட்டுள்ளார். இதில் ரோஜா பொக்கேவையும் அவர் நடாஷாவிற்கு பரிசளித்துள்ளார்.

ஐபிஎல் 2020 தொடரில் பங்கேற்பு
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, முதுகுவலி காரணமாக தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் இடம்பெறாமல் இருந்தார். கடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் அவர் இடம்பெற்ற நிலையில், கொரோனா பரவல் காரணமாக அந்த தொடர் கைவிடப்பட்டது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 19ம் தேதி துவங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் அவர் ஈடுபட உள்ளார்.

ஹர்திக் பாண்டியா பதிவு
கடந்த ஜனவரி 1ம் தேதி தன்னுடைய நிச்சயதார்த்தத்தை அறிவித்த பாண்டியா, மே மாதத்தில் நடாஷா கர்ப்பத்தை அறிவித்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நடாஷா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதையடுத்து சனிக்கிழமை தன்னுடைய தன்னுடைய குழந்தையை சமூக வலைதளத்தில் அறிமுகப்படுத்தினார். மேலும் டயாப்பர் வாங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ரோஜாவிற்கு ரோஜா பொக்கே
இந்நிலையில் குழந்தை பிறந்து முதல் முறையாக நடாஷாவுடன் புகைப்படம் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் பாண்டியா. அதில் அழகான ரோஜா பொக்கேவை நடாஷாவிற்கு பரிசளித்த பாண்டியா, தன்னுடைய ரோஜாவிற்கு தான் ரோஜாக்களை பரிசளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் உலகின் சிறந்த பரிசை தனக்களித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ரசிகர்கள் ஆர்வம்
கொரோனா ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீடுகளில் முடங்கியிருந்த நிலையில், ஹர்திக் பாண்டியா, சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக காணப்பட்டார். தொடர்ந்து நடாஷா மற்றும் குடும்பத்தினருடன் தான் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications