For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாரா ஒலிம்பிக்கிலும் ஊக்க மருந்து பஞ்சாயத்து.. ஒட்டுமொத்த ரஷ்யா அணிக்கும் தடை

By Mathi

ரியோ: மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளிலும் ஊக்க மருந்து சர்ச்சைகளில் சிக்கியதால் ஒட்டுமொத்த ரஷ்யா அணிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாரா ஒலிம்பிக் போட்டிகள் செப்டம்பர் 7-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெற உள்ளன. தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பிரேசில் நாட்டின் ரியோ நகரில் இப்போட்டிகள் நடைபெறும்.

Russian Paralympic team’s ban from Rio Games

இப் போட்டிகளில் பங்கேற்கும் ரஷ்யாவின் வீரர்கள் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினர். இதனால் ஒட்டுமொத்த ரஷ்யா அணியும் போட்டிகளில் பங்கேற்க சர்வதேச பாரா ஒலிம்பிக் சங்கம் தடை விதித்துள்ளது.

இதற்கு எதிராக ரஷ்யா மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. தற்போதைய ஒலிம்பிக் போட்டிகளிலும் ரஷ்யாவின் வீரர்கள் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கினர். இதனால் தடகளப் போட்டிகளில் ரஷ்யா வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, August 8, 2016, 8:55 [IST]
Other articles published on Aug 8, 2016
English summary
The International Paralympic Committee (IPC) has confirmed a blanket ban on Russian disabled athletes from competing at the Rio Paralympics as recommended by World Anti-Doping Agency (WADA). Russia says it will appeal the decision.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X