நீங்க எந்த ஊரு.. அட நானும் அந்த ஊர்தான்.. எந்த தெரு.. அட நானும் அதே தெருதான்!
டெல்லி: இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்தனர். சார் நீங்க எந்த ஊரு'. அட நானும் அந்த ஊர்தான்'. நீங்க எந்தத் தெரு'. அட நானும் அதே தெருதான்'. உங்க வீட்டு நம்பர்'. அடடா நானும் அதே வீட்டில்தான் இருக்கிறேன்'….
பொழுதுபோக்குவதற்காக இரண்டு பேர் பேசுவதாக வந்த இந்த ஜோக் ரொம்ப ரொம்ப பழசுதான். ஆனால், இதுதான், இரண்டு பிரபலங்கள் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணியின் மனைவி சாக் ஷியும், கேப்டன் விராட் கோஹ்லியின் காதலியான நடிகை அனுஷ்கா சர்மாவும் பேசிக் கொண்டிருந்தபோதுதான், இருவரும் ஒரே பள்ளியில் படித்தது அவர்களுக்கு தெரியவந்தது.
சின்னம் போனதால், சின்னம்மா, அம்மாவாகிவிட முடியுமா என்று சிலருக்கு சந்தேகம் வந்ததுபோல, எப்படி இவர்கள் ஒன்றாக படித்திருப்பார்கள் என்ற சந்தேகம் வரலாம்.
டோணியின் மனைவி சாக் ஷி, அசாம் மாநிலம் குவஹாத்தியில் பிறந்தவர். அங்கேயே படித்து, டோணியைக் கரம் பிடித்தவர். நடிகை அனுஷ்கா சர்மா, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியாவில் பிறந்தவர். கேப்டன் விராட் கோஹ்லியின் கரமாக உள்ளார்.
டோணிக்கும், விராட் கோஹ்லிக்கும் இடையேயான நெருக்கம் உலகம் அறிந்தது. அதேபோல், சாக் ஷியும், அனுஷ்கா சர்மாவும் அடிக்கடி சந்தித்து பேசுவார்கள். அப்படி பேசும்போதுதான், இருவரும் அசாமில் ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்பது தெரியவந்தது.
அனுஷ்காவின் தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர். அசாமில் அவர் பணியாற்றியபோதுதான், இருவரும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர்.
ஒரே பள்ளியில் படித்தது, கிரிக்கெட் வீரருடனான வாழ்க்கை என, இருவரும் எப்போது சந்தித்தாலும், சேம் பிஞ்ச் செய்து கொள்கின்றனர்.
Story first published: Friday, November 24, 2017, 17:33 [IST]
Other articles published on Nov 24, 2017


Click it and Unblock the Notifications