அவரு சைக்கிள் ஓட்ட.. இவங்க கயிறைப் பிடிச்சு இழுக்க.. வீட்டுக்குள்ள ஒரு புயல்.. கலக்குறீங்க சாக்ஷி!
ரோதக்: இதோ இன்னும் ஒரு விளையாட்டு வீராங்கனையின் வீட்டுக்குள் ஒரு குதூகலம் வீடியோ.. குதூகலம்னதும் வேற மாதிரி யோசிக்காதீங்க மக்களே. விளையாட்டு வீராங்கனைன்னாலே, உடற்பயிற்சி அவங்களுக்கு குதூகலத்தை கொடுக்கக்கூடியது தானே.. இதுவும் ஒரு உடற்பயிற்சி வீடியோதான்.
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு உடம்பு பிட்னஸ்தான் முக்கியக் கவலையாக இருக்கும். விளையாடும்போதாவது ஏதாவது உடற்பயிற்சி இருக்கும், உடம்பும் பிட்டாக இருக்கும். ஆனால் போட்டிகளே இல்லாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதால் பெரும் குழப்பமாகி விட்டது அவர்களுக்கு.
இருந்தாலும் விடாமல் விதம் விதமாக டிசைன் டிசைனாக உடற்பயிற்சிகளை அவர்கள் தொடர்ந்தபடிதான் உள்ளனர். அதில் ஒன்றுதான் நம்ம சாக்ஷி மாலிக்கின் இந்த வீடியோ.

சாக்ஷி மாலிக் போட்ட டிவிட்
இந்தியாவின் மல்யுத்த ஸ்டார் வீராங்கனைதான் சாக்ஷி மாலிக். ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியவர் .டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக ஆவலாக காத்திருந்தார். ஆனால் தற்போது போட்டிகள் தள்ளிப் போடப்பட்டு விட்டதால் மனம் சோர்வாகி விட்டது. இருந்தாலும் தனது உடற்பயிற்சிகளை விட்டபாடில்லை அவர்.
கணவருடன் தீவிர பயிற்சி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வந்தார். ஆனாலும் போட்டி ரத்தாகி விட்டதால் தனது கணவர் சத்யவர்த் கடியானுடன் இணைந்து வீட்டுக்குள்ளேயே தனது பயிற்சிகளைத் தொடர்கிறார். சைக்கிளிங், புல்லிங் என விதம் விதமான உடற்பயிற்சிகளை இருவருமே இணைந்து வீட்டுக்குள் செய்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோவைதான் தற்போது வெளியிட்டுள்ளார் மாலிக்.
ஆரோக்கியமும் இருக்க வேண்டும்
சோசியல் டிஸ்டன்சிங்கை மதிப்போம், கூடவே ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்போம் என்று அந்த வீடியோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் சாக்ஷி மாலிக். அவர் மட்டுமல்லிங்க, நம்ம மேரி கோமும் ஒரு வீடியோவை டிவிட்டரில் போட்டுள்ளார். இவரும் போட்டிருப்பது உடற்பயிற்சிதான். இவர் தனது வீட்டு வளாகத்திற்குள் ஸ்கிப்பிங் பண்ணுவது போல வீடியோ போட்டுள்ளார்.
தலைகீழ் போஸ் கொடுத்த அஸ்வினி
இதேபோல பேட்மின்டன் வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா ஒரு வீடியோ போட்டிருந்தார். அதில் அவர் தனது வீட்டு படுக்கையில் தலைகீழாக நிற்பது போன்ற போஸ் கொடுத்து வீடியோ போட்டிருந்தார். அதாவது இதுவும் கூட உடற்பயிற்சிதான். இதன் மூலம் இவர்கள் சொல்ல வருவது.. சோர்ந்து போய் விடாதீங்க.. ஆக்டிவா இருங்க.. சுறுசுறுப்பா இருங்க. ஏதாவது செய்து கொண்டிருங்க என்பதுதான். புரிந்ததா மக்களே.


Click it and Unblock the Notifications