Sania Mirza- இது என்னோட வீடு.. சோயிப் மாலிக்கிற்கு கல்தா.. மகன் பெயரில் துபாய் வீட்டை மாற்றிய சானியா
துபாய் : பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா துபாயில் தான் வாங்கிய வீட்டை சோயிப் மாலிக்கின் பெயரை நீக்கி விட்டு அவருடைய மகன் பெயரை சூட்டி இருக்கிறார். டென்னிஸ் உலகில் இந்தியாவிலிருந்து புயலாக கிளம்பி பல்வேறு சாதனைகளை படைத்தவர் சானியா மிர்சா.
மகளிர் விளையாட்டுக்கு முகவரியாக விளங்கிய சானியா மிர்சா, இரட்டையர் பிரிவில் பல கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி இருக்கிறார். இந்த நிலையில் சானியா மிர்சா பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக், கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2018 ஆம் ஆண்டு இசான் என்ற ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சானியா மிர்சாவும் சோயிப் மாலிக்கும் கணவன் மனைவியாக இருந்த நேரத்தில் துபாயில் சானியா மிர்சா ஒரு வீட்டை வாங்கி இருக்கிறார். சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட அந்த வீட்டுக்கு கணவர் சோயிப் மாலிக் பெயரை அவர் சூட்டி இருந்தார்.
இந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2023 ஆம் ஆண்டு சானியா மிர்சா விவகாரத்து பெற்றார். இதன்பிறகு சோயிப் மாலிக் 2024 ஜனவரி மாதம் பாகிஸ்தான் நடிகை சானா ஜாவித்தை திருமணம் செய்து கொண்டார். இந்த தருணத்தில் சானியா மிர்சா தனது மகனுடன் வாழ்ந்து கொண்ட நிலையில் தற்போது இருவரும் துபாயில் தங்கி இருக்கிறார்கள்.
இந்த சூழலில் தான் சானியா மிர்சா தாம் வாங்கிய வீட்டில் குடியேறி இருக்கிறார். அப்போது அந்த வீட்டிற்கு சோயிப் மாலிக், பெயர் இருந்ததை அடுத்து அதை அதிரடியாக அவர் மாற்றி தனது மகன் இசான் பெயரை சூட்டி இருக்கிறார். சானியா மிர்சாவின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு ரசிகர்களும் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள். சானியா மிர்சா இதனை முன்பே செய்திருக்க வேண்டும் என்றும் இனி வீடு வாங்கும் பெண்கள் தங்களது பெயரில் வீட்டை வாங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர் .


Click it and Unblock the Notifications