Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சோயிப் மாலிக்கால் மனதளவில் சானியா மிர்சா மகன் பாதிப்பு..பள்ளியில் நடந்த சம்பவம்..கண்ணீரில் குடும்பம்

ஐதராபாத் : பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவர் சோயிப் மாலிக் வேறு திருமணம் செய்து கொண்டதால் அது அவரது மகனின் மனநிலையை பாதிக்க வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக தாய் தந்தைக்குள் ஏதேனும் மோதல் நடந்தால் அது பிள்ளைகளின் மனதை வெகுவாக பாதிக்கும். அதுவும் குழந்தை சிறு வயதில் இருக்கும் போது தாய் தந்தை விவாகரத்து பெற்றால் அது அந்த குழந்தைகள் வாழ்க்கை முழுவதும் பாதிப்பு அடைய செய்யும்.

Sania Mirza reveals about his son was affected by Mentally due to shoaib malik divorce

அதுவும் பிரபலங்களின் திருமண முறிவு அந்த குழந்தைகளை எங்கேயும் செல்ல விடாது. அந்த வகையில் சானியா மிர்சாவின் ஐந்து வயது மகனான இசான் தற்போது பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் சோயிப் மாலிக், சனா ஜாவித் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சானியா மிர்சா சோயிப் மாலிக்கிற்கு பிறந்த இசான் மிர்சா தனது பள்ளிக்கு துபாயில் சென்று இருக்கிறார். ஆனால் அங்கு சோயிப் மாலிக், வேறு திருமணம் செய்து கொண்டதை சுட்டிக்காட்டி பள்ளி குழந்தைகள் அவரை வெகுவாக கிண்டல் செய்து இருக்கிறார்கள். சோயிப் மாலிக் உங்க அம்மாவை விட்டு சென்றுவிட்டாராமே என்று பலரும் கேள்வி கேட்டு அந்த ஐந்து வயது சிறுவனை துளைத்து இருக்கிறார்கள்.

இதனால் மனம் பாதிக்கப்பட்ட இஸ்சாம் மிர்சா, தற்போது நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கூறி அடம்பிடித்து இருக்கிறார். இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சானியா மிர்சா தன்னுடைய பையனை அழைத்துக் கொண்டு ஹைதராபாத்துக்கு வந்திருக்கிறார். சோயிப் மாலிக்கின் இந்த ஒரு செயலால் தற்போது ஒட்டுமொத்த குடும்பமுமே பாதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் மீடியாவின் வெளிச்சத்தால் பள்ளியில் படித்த குழந்தைகள் கூட வம்பிழுக்க வைத்து இசான் மிர்சாவை மனதளவில் பாதிக்க செய்திருக்கிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சானியா மிர்சா வெளிப்படையாகவே பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் நயன் ஹனிஃபிடம் கூறியிருக்கிறார்.

தனது மகனின் மனது இந்த திருமண முடிவால் வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனை தாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்று தெரியவில்லை என்றும் அவர் கூறியதாக அந்த பத்திரிகையாளர் தெரிவித்து இருக்கிறார். அண்மையில் சானியா மிர்சா தன்னுடைய மகனையும் தங்கை மகளையும் அணைத்து என்னுடைய வாழ்க்கை நீங்கள் தான் என்று உருக்கமாக பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, February 4, 2024, 10:02 [IST]
Other articles published on Feb 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+