ஜென்டர் சர்ச்சை-பதக்கம் இழக்கிறார் சாந்தி
டெல்லி:பாலின சோதனை முடிவைத் தொடர்ந்து இந்திய தடகள வீராங்கனை சாந்திசெளந்தரராஜனுக்கு வழங்கப்பட்ட வெள்ளிப் பதக்கத்தைத் திரும்பப் பெற ஆசியஒலிம்பிக் கவுன்சில் முடிவு செய்துள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம்அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரிடமிருந்து பதக்கத்தை திரும்பப் பெறவும்இந்திய தடகள சங்கத்திற்கு ஒலிம்பிக் சங்கம் உத்தரவிட்டுள்ளது.தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் சாந்தி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதையடுத்து தமிழக அ ரசுஅவருக்கு ரூ. 15 லட்சம் பரிசை அறிவித்தது.
புதுக்கோட்டை அருகே உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. அவரதுகுடும்பத்தின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு இந்த நிதியுதவியை தமிழக அரசுஅறிவித்தது.
இந்த நிலையில் சாந்திக்கு நடத்தப்பட்ட பாலினச் சோதனையில் அவரது பெண்தன்மை குறித்து அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. காரணம், பெண்களுக்கு இருக்கவேண்டிய ஹார்மோன் அளவு சாந்தியிடம் இல்லை என சோதனையில் தெரியவந்ததேகாரணம். எனவே இந்த சோதனையில் சாந்தி தோல்வி அடைந்ததாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
தோஹாவுக்குக் கிளம்பும் முன்பே இதுதொடர்பான சோதனை சாந்திக்கு இந்தியாவில்நடத்தப்பட்டதாகவும், ஆனால் அதில் வந்த முடிவை சரிவர ஆராயாமல்,தோஹாவுக்கு சாந்தி அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சாந்தி செளந்தரராஜன் சர்ச்சை தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம் இதுவரை கருத்துஎதையும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வந்தது. இதனால் சாந்தி விவகாரம் பெரும்குழப்பமாக இருந்து வந்தது.
![]() |
இந்த நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் தனது மெளனத்தைக் கலைத்துள்ளது.சாந்திக்கு நடந்த சோதனையில் அவரது பெண்மைத் தன்மை குறைபாடு உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அவருக்கு வழங்கப்பட்ட வெள்ளிப் பதக்கத்தைதிரும்பப் பெறவும் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
இந்த முடிவு இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பத்து நாட்களில் அறிக்கை தருமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின்மருத்துப் பிரிவு தலைவர் டாக்டர் மன்மோகன் சிங்கை ஒலிம்பிக் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், சாந்தியிடமிருந்து வெள்ளிப் பதக்கத்தை திரும்பப் பெற்று அதை ஆசியஒலிம்பிக் கவுன்சிலிடம் ஒப்படைக்குமாறு இந்திய தடகள சங்கத்தையும் அது கேட்டுக்கொண்டுள்ளது.
இதன் மூலம் சாந்தியிடமிருந்து வெள்ளிப் பதக்கம் பறிமுதலாவது உறுதியாகியுள்ளது.இந்த விவகாரம் இந்திய தடகளத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சி அலைகளைஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியிலும் சாந்திக்கு பாலினச்சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதில் அவர் வெற்றி பெற்றதாகஅறிவிக்கப்பட்டது. அதில் 800 மீட்டர் ஓட்டத்தில் சாந்தி வெள்ளிப் பதக்கம்வென்றார்.
![]() |
இதுகுறித்து தமிழக தடகள சங்கத்தின் இணைச் செயலாளர் வல்சன் கூறுகையில், இதைநாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
சாந்திமீது சந்தேகம் எழுந்துள்ளதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. பல்வேறுவெளிநாட்டுப் போட்டிகளிலும், தேசிய அளவிலான போட்டிகளிலும் சாந்திதொடர்ந்து பங்கேற்று வருகிறார். இதுவரை ஒருமுறை கூட சர்ச்சை எழுந்ததில்லைஎன்றார்.
சாந்தியின் பயிற்சியாளரான நாகராஜன் கூறுகையில், 1990ம் ஆண்டு முதல் பாலினச்சோதனை நடைபெற்றதில்லை. கடந்த 2 ஆண்டுகளாக எனக்கு சாந்தியைத் தெரியும்.அவர் பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரியில்தான் படித்தார். அவரைசந்தேகப்படுவதற்கான காரணமே இல்லை என்றார்.
முன்னதாக இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தநிகழ்ச்சியின்போது சாந்தி செளந்தரராஜன் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகளுக்குமுதல்வர் கருணாநிதி ரொக்கப் பரிசினை வழங்கினார். சாந்திக்கு ரூ. 15 லட்சம்ரொக்கப் பரிசும், ரூ. 1 லட்சம் மதிப்புள்ள வண்ணத் தொலைக்காட்சியும் பரிசாகஅளிக்கப்பட்டது.
பிற வீரர்களான சசிகிரணுக்கு ரூ. 20 லட்சமும், சாந்திக்கு ரூ. 15 லட்சமும், அஞ்சுவுக்குரூ. 15 லட்சமும், கோஷலுக்கு ரூ. 10 லட்சம் பரிசையும் முதல்வர் வழங்கினார்.
பரிசு பெறுவதற்காக வந்த சாந்தியை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு கேட்டபோது,இதுவரை எனக்கு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை. இந்த நிமிடம் வரைநான் தான் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனையாக உள்ளேன். பதக்கம்என்னிடம்தான் உள்ளது என்றார் சாந்தி.
பரிசுத் தொகையை சாந்தியிடம் வழங்கியபோது முதல்வர் கருணாநிதி அவரிடம் சிலவிநாடிகள் பேசினார். அப்போது, உங்களது பாலினம் குறித்து உறுதியுடன்இருக்கிறீர்களா என்று கருணாநிதி கேட்டதற்கு ஆம் என்று தலையசைத்துப்பதிலளித்தார் சாந்தி.
பின்னர் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான்செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுவரை தமிழக அரசுக்கு சாந்தி தொடர்பாக எந்தஅதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை.
![]() |
சாந்தி பதக்கம் வென்றவுடன் முதல்வர் பரிசுத் தொகையை அறிவித்து விட்டார். அதைஏன் கொடுக்காமல் நிறுத்த வேண்டும்? இந்தப் பரிசுத் தொகை மனிதாபிமானஅடிப்படையில்தான் அறிவிக்கப்பட்டது. எனவே இதை நிறுத்தி வைக்க வேண்டியஅவசியம் இல்லை.
சாந்தி எந்தத் தவறும் செய்யவில்லை. சாந்திக்குப் பரிசு கொடுக்க வேண்டும் என்பதுமுதல்வர் எடுத்த முடிவு என்றார் அமைச்சர்.
சாந்திக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவரது பெண்மைக் குறைபாடு சோதனைமுடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளதால் சாந்திக்கு சர்வதேசபோட்டிகளில் விளையாட 2 ஆண்டு தடை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.அப்படி தடை விதிக்கப்பட்டால் அதை எதிர்த்து 2 ஆண்டுகளுக்குப் பிறகே அப்பீல் செய்ய முடியும்.
அறுவைச் சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு,சர்வதேச தடகள சங்கத்தின் விதிமுறைகளை பூர்த்தி செய்த பின்னரே அவர் அப்பீல்செய்து தடையை நீக்க கோர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சாந்தி செளந்தரராஜன் விவகாரம் இந்திய விளையாட்டுத் துறையினர் மத்தியில்பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:47 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications


