Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பையில் வெண்கல பதக்கத்தை ஏற்க மறுத்த குத்து சண்டை வீராங்கனை மன்னிப்பு கேட்டார்

டெல்லி: ஆசிய கோப்பையில் கிடைத்த வெண்கல பதக்கத்தை ஏற்க மறுத்த குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி நடந்த சம்பவத்திற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆசிய கோப்பை குத்துச்சண்டையில் மகளிருக்கான 57-60 கிலோ எடைப்பிரிவு அரை இறுதியில், தென் கொரியாவின் ஜினா பார்க் வெற்றிபெற்று, இந்தியாவின் சரிதா தேவி தோல்வியடைந்தார்.

ஆனால், சரிதா தேவியோ தான் தோல்வியடையவில்லை என்றும், நடுவர் தவறாக தீர்ப்பளித்தார் என்றும் குற்றம்சாட்டி, வெண்கலப் பதக்கத்தை வாங்க மறுத்துவிட்டார்.

Sarita Devi offered 'unconditional apology', says AIBA

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம், இந்த விவகாரத்தில் விளையாட்டு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி சரிதா மீது கோபத்தை வெளிப்படுத்தியது. இதையடுத்து சரிதா தேவியை குத்துச்சண்டை போட்டிகளில் விளையாட தடை விதிக்கவும் அந்த அமைப்பு ஆலோசனை நடத்தியது.

இதையடுத்து, சர்வதேச குத்துச்சண்டை சம்மேளன தலைவர் சிங் கு வு-விற்கு சரிதா தேவி மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளார். நடந்த சம்பவத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சரிதா தேவிக்கு மீண்டும் வெண்கல பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

Story first published: Friday, October 3, 2014, 12:22 [IST]
Other articles published on Oct 3, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+