Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விளையாட்டு இல்லாட்டி என்ன.. டான்ஸ் இருக்கே.. பாட்டு இருக்கே.. பட்டையைக் கிளப்பலாமே

லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த நெட் பால் வீராங்கனை சாஷா கோர்பின் விளையாட்டு நிறுத்தப்பட்டுள்ள இந்த நிலையிலும் தன்னை படு உற்சாகமாக வைத்துக் கொண்டுள்ளார்.

Recommended Video

Sachin is the best technical batsmen says Clarke

விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ரத்தாகி விட்டாலும் கூட அவரது உற்சாகமும், எனர்ஜியும் கொஞ்சம் கூட குறையவில்லை. ஜாலியாக டிக்டாக் செய்கிறார். தனது சகோதரியுடன் இணைந்து பால்கனி மூலமாக நெட்பால் ஆடுகிறார்.

இவரது வீடியோக்கள் மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகின்றன. இவரது எனர்ஜியைப் பார்த்து பலரும் பாராட்டவும் செய்கின்றனர். உண்மையில் சாஷா இந்த லாக்டவுன் பீரியடை மிகவும் எளிமையாக எடுத்துக் கொண்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

நெட்பால் சாஷா கோர்பின்

லண்டனைச் சேர்ந்தவர் சாஷா கோர்பின். இங்கிலாந்தைச் சேர்ந்த சர்வதேச நெட்பால் வீராங்கனை. பல்வேறு உள்ளூர் அணிகளுக்கு ஆடியுள்ள அவர் இங்கிலாந்து தேசிய அணியில் 2007ம் ஆண்டு முதல் ஆடி வருகிறார். 2014 காமன்வெல்த் போட்டிகளிலும் கலந்து கொண்டார். அதில் இங்கிலாந்து அணி கடுமையாக போராடியும் கடைசியில் வெண்கலப் பதக்கம் கூட பெற முடியாமல் ஜமைக்காவிடம் தோற்றது.

செம எனர்ஜி

தற்போது இங்கிலாந்திலும் லாக்டவுன். அங்கும் கொரோனாவைரஸ் தாண்டவமாடி வருகிறது. இதனால் வீட்டோடு முடங்கிக் கிடக்கிறார் கோர்பின். ஆனாலும் அவரது எனர்ஜியும் உற்சாகமும் தலைவிரித்தாடுகிறது. படு ஜாலியாக இருக்கிறார். டிக்டாக் அவருக்கு நன்றாக கை கொடுக்கிறது. பல பாடல்களுக்கு ஆடி வீடியோக்களைப் போட்டுக் கொண்டிருக்கிறார்.

பால்கனி பந்தாட்டம்

அத்தோடு நிற்காமல் தனது சகோதரி கேடின் கோர்பினுடன் இணைந்து பால்கனி நெட்பால் ஆடியும் அசத்தியுள்ளார். அதாவது இவர் ஒரு பால்கனி.. சகோதரி இன்னொரு பால்கனி. இங்கிருந்து இவர் பந்தை அடிக்க. அவர் அங்கிருந்து அதைப் பிடிக்க என கலக்கியுள்ளனர். அத்தோடு இருவரும் சேர்ந்து டிக்டாக்கும் செய்து அந்த வீடியோவையும் போட்டுள்ளனர். அதுவும் வைரலாகி விட்டது.

கலவை வீடியோ கலக்கல்

அதேபோல இன்னொரு வீடியோவும் இவர் போட்டுள்ளார். இதில் ஏகப்பட்ட வீரர் வீராங்கனைகள், அவர்களது குடும்பத்தினர் உள்ளனர். எல்லோரும் வீட்டுக்குள்ளேயே உடற்பயிற்சி செய்து, டான்ஸ் ஆடி என கலக்கியுள்ளனர். இதன் தொகுப்பை அருமையான இசையின் பின்னணியில் போட்டு வெளியிட்டுள்ளார் சாஷா. இதைப் பார்க்கும்போதே அப்படி ஒரு உற்சாகம் வருகிறது. மொத்தத்தில் லாக்டவுன் சமயத்திலும் எப்படி ரிலாக்ஸாக இருக்கலாம் என்பதற்கு சாஷாதான் நல்ல உதாரணம்.

Story first published: Sunday, April 12, 2020, 12:58 [IST]
Other articles published on Apr 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+