Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2700 கோடி.. நிமிடத்திற்கு 10,000 ரூபாய்.. உலகையே வாய்பிளக்க வைத்த குத்துச்சண்டை வீரர்

மெக்சிகோ சிட்டி : மெக்சிகோ நாட்டின் முன்னணி குத்துச்சண்டை வீரர் சால் கானலோ அல்வரேஸ் உலகின் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் வரிசையில் புதிய சாதனை படைத்துள்ளார்.

இவர் ஒரு ஒளிபரப்பு நிறுவனத்துடன் போட்டுக் கொண்டுள்ள ஒப்பந்தப்படி சுமார் 365 மில்லியன் டாலர் சம்பாதிக்க உள்ளார்.

விளையாட்டு உலகத்தில் இதுவே அதிக மதிப்புடைய ஒப்பந்தம் என கருதப்படுகிறது. இந்த ஒப்பந்தப்படி அடுத்த ஐந்து ஆண்டுகளில் 365 மில்லியன் டாலர் சம்பாதிப்பார் சால் கானலோ அல்வரேஸ்.

11 போட்டிகளுக்கு ஒப்பந்தம்

11 போட்டிகளுக்கு ஒப்பந்தம்

டாசன் என்ற விளையாட்டு ஒளிபரப்பு நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில், நடக்கும் 11 போட்டிகளுக்கு அல்வரேஸுடன் இந்த 365 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டுள்ளது. இந்திய மதிப்புப்படி சுமார் 2700 கோடி ரூபாய் ஆகும்.

1 நிமிடத்திற்கு பத்தாயிரம் ரூபாய்

1 நிமிடத்திற்கு பத்தாயிரம் ரூபாய்

இதன் படி ஒரு போட்டிக்கு 33 மில்லியன் (கிட்டத்தட்ட 245 கோடி ரூபாய்) சால் கானலோ அல்வரேஸ்-க்கு கிடைக்கும். இதை நிமிடங்களுக்கு கணக்கிடும் பட்சத்தில் ஒரு நிமிடத்திற்கு பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் விளையாட்டு வீரராக மாறுவார் அல்வரேஸ்.

மெஸ்ஸியை விட அதிகம்

கால்பந்து நட்சத்திரங்கள் மெஸ்ஸி, நெய்மர் போன்றோர் 350 மில்லியன் டாலர் வரை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை விட அதிகமான மதிப்பிற்கு ஒப்பந்தம் செய்து கொண்டு உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் மெக்சிகோ நாட்டின் அல்வரேஸ்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகள் இந்தியாவில் பிரபலமில்லை என்றாலும் அமெரிக்க கண்டத்தில் மிக மிக பிரபலம். அங்கே அதிகம் பணம் புழங்கும் ஒரு விளையாட்டாகவும் உள்ளது. அதன் காரணமாகவே அல்வரேஸ் இத்தனை பெரிய ஒப்பந்தம் பெற்றுள்ளார்.

Story first published: Thursday, October 18, 2018, 19:15 [IST]
Other articles published on Oct 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+