Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10க்கும் 13க்கும் சண்டை.. நல்லவேளை சவீதா புண்ணியத்தால் தப்பினோம்!

ரியோ டி ஜெனீரோ: ஒலிம்பிக் போட்டியில் நேற்று இந்தியாவும், ஜப்பானும் மோதிய மகளிர் ஹாக்கிப போட்டியைப் பார்த்தவர்களுக்கு இந்தியா அந்தப் போட்டியை டிரா செய்த விதம் சிலாகிக்க வைத்திருக்கும். காரணம், ஜப்பானின் கடுமையான தாக்குதலை இந்திய மகளிர் நம்பிக்கையுடன் எதிர் கொண்ட விதம் மட்டுமல்லாமல், கூடவே கோல் கீப்பர் சவிதா பூனியாவின் அட்டகாச ஆட்டத் திறமையும் முக்கியமான மற்றொரு காரணமாகும்.

சவீதா பூனியாவின் திறமையால்தான் நேற்று ஜப்பானின் வெற்றி வாய்ப்பு சிதறுண்டு போனது. சவீதா மட்டும் இல்லாமல் போயிருந்தால் இந்தியா நிச்சயம் தோற்றிருக்கும். அதுவும், பெரிய கோல் வித்தியாசத்தில்.

சவீதாவின் புண்ணியத்தால் ஜப்பானின் கோல் மழை தடுக்கப்பட்டு, இந்தியாவுக்கு டிரா கிடைத்தது. தோல்வியிலிருந்தும் நாம் தப்பினோம்.

சபாஷ் சவீதா

சபாஷ் சவீதா

ஹரியானாவைச் சேர்ந்தவர் சவீதா பூனியா. இந்திய மகளிர் ஹாக்கி அணியின் சூப்பர் கோல் கீப்பர். இவரைத் தாண்டி பந்து பறப்பது ரொம்ப அரிதுதான். இந்தியா கண்ட மிகச் சிறந்த மகளிர் கோல் கீப்பர்களில் சவீதாவுக்கு தனி இடம் உண்டு.

10க்கும் 13க்கும் நடந்த சண்டை

10க்கும் 13க்கும் நடந்த சண்டை

தர வரிசையில் 10வது இடத்தில் இருக்கும் ஜப்பானுக்கும், 13வது இடத்தில் இருக்கும் இந்தியாவுக்கும் நடந்த இந்த :சண்டையில் ஆரம்பத்தில் ஜப்பானே ஆதிக்கம் செலுத்தியது. படு ஆவேசமாக அவர்கள் கோலடிக்கப் பாய்ந்ததை சமாளிக்க முடியாமல் சற்று தடுமாறினர் இந்திய மங்கைகள்.

படு வேக கோல்கள்

படு வேக கோல்கள்

முதல் இரு கால் மணி நேர ஆட்ட முடிவில் ஜப்பான் 2 கோல்களை அடித்து விட்டது. இதனால் இந்தியா தடுமாறியது. ஆனால் அதன் பின்னர் நடந்தது மேஜிக். இந்திய வீராங்கனைகளுக்கு சவீதா ரூபத்தில் சகாயம் கிடைத்தது.

ஜப்பானை சிதறடித்த சவீதா

ஜப்பானை சிதறடித்த சவீதா

ஜப்பான் அணி அதன் பிறகு பலமுறை கோல்கள் அடிக்க முயன்றபோதும் இந்தியத் தரப்பில் சவீதா புயலென பாய்ந்து வந்து தடுத்து விட்டார். கிட்டத்தட்ட 4 அருமையான ஜப்பானின் கோல் வாய்ப்புகளைத் தடுத்து விரட்டினார் சவீதா.

சவீதா கொடுத்த பூஸ்ட்

சவீதா கொடுத்த பூஸ்ட்டால் உற்சாகமடைந்த இந்திய வீராங்கனைகள் மறுபக்கம் மளமளவென ஜப்பானின் தடுப்புகளைத் தகர்த்து 2 கோல்களைப் போட்டு சமன் செய்து விட்டனர்.

லீலிமா போட்ட லவ்லி கோல்

லீலிமா போட்ட லவ்லி கோல்

இதில் ராணி ராம்பால் ஒரு கோல் போட்டார். ஆனால் லீலிமா மின்ஸ் போட்ட கோல்தான் செம சுவாரஸ்யமானது. படு துரிதமாக, சாமர்த்தியமாக அவர் போட்ட கோலால் இந்திய தரப்பு பெரும் நிம்மதியடைந்தது.

சவீதாவுக்கே முழுப் பெருமையும்

சவீதாவுக்கே முழுப் பெருமையும்

உண்மையில் இந்தியாவை விட ஜப்பானுக்கே அதிக அளவில் கோலடிக்க வாய்ப்பு கிடைத்தது. பல முறை எளிதான வாய்ப்புகளையும் கூட பெற்றனர். ஆனால் சவீதாவின் துரிதகதியிலான செயல்பாடு, புத்திசாலித்தனமாக செயல்பட்டது ஆகியவை ஜப்பானி்ன் கனவை சிதறடித்து விட்டது.

மிரள வைத்த கோல் தடுப்பு

மிரள வைத்த கோல் தடுப்பு

குறிப்பாக யூரி நகாய் கோலடிக்க முயன்றபோது அதை படு லாவகமாக டைவ் அடித்து சவீதா தடுத்த விதம் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது.

சதமடித்த சவீதா

சதமடித்த சவீதா

சவீதா இந்தியாவுக்காக 105 ஹாக்கிப் போட்டிகளில் கோல் கீப்பராகப் பணியாற்றியவர். இந்தியாவின் பல வெற்றிகளுக்கு முக்கியக் காரணமாகவும் அமைந்த பெருமைக்குரியவர்.

ஆசியக் கோப்பையில் வெண்கலம்

ஆசியக் கோப்பையில் வெண்கலம்

மலேசியாவில் நடந்த 8வது ஆசிய மகளிர் ஹாக்கிப் போட்டியில் சவீதாவின் திறமையால்தான் இந்தியா 3வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது. அந்தத் தொடரில் சிறந்த கோல் கீப்பராகவும் சவீதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நம்பிக்கைப் பயணம் தொடரட்டும்

நம்பிக்கைப் பயணம் தொடரட்டும்

36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில் விளையாடி வருகிறது. எனவே இந்த முறை இந்திய ஹாக்கி அணி பெருமை தேடித் தருமா என்ற பெரும் எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்... சவீதா அதற்கு உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கையுடன்.

Story first published: Monday, August 8, 2016, 15:16 [IST]
Other articles published on Aug 8, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+