Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 5-வது தங்கம்: வட்டு எறிதலில் தங்கம் வென்றார் சீமா பூனியா

இன்சியான்: வட்டு எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை சீமா பூனியா தங்கம் வென்றுள்ளார். இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 5-வது தங்கப்பதக்கம் வென்றது.

தென் கொரியாவில் நடக்கும் ஆசிய விளையாட்டு பெண்களுக்கான வட்டு எறிதலில், அதிகபட்சமாக 61.03 மீ., துாரம் எறிந்த இந்தியாவின் சீமா புனியா, முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். அடுத்த இரண்டு இடங்களை சீன வீராங்கனைகள் கைப்பற்றினர்.

மகளிர் வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் 60மீ தூரத்தைக் கடந்த ஒரே வீராங்கனையாக சீமா பூனியா திகழ்ந்தார். மற்றொரு இந்திய வீராங்கனை கிருஷ்ணா பூனியா 55.57மீ தூரம் விட்டெறிந்து 4வது இடத்தில் முடிந்தார்.

Seema bags gold in athletics

நவீன் வெண்கலம்

ஆண்களுக்கான 3000 மீ., 'ஸ்டீபில்சேஸ்' ஓட்டத்தின் பைனலில், பந்தய துாரத்தை 8 நிமிடம், 40.39 வினாடிகளில் கடந்த இந்தியாவின் நவீன் குமார் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். முதலிடம் பிடித்த கத்தாரின் அபுபக்கர் அலி கமல், தங்கம் வென்றார். இரண்டாவது இடத்தை பக்ரைனின் முபாரக் சலிம் கைப்பற்றினார்.

ஜெய்ஷா வெண்கலம்

பெண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தின் பைனலில், பந்தய துாரத்தை 4 நிமிடம், 13.46 வினாடிகளில் கடந்த இந்தியாவின் ஜெய்ஷா, மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். முதலிரண்டு இடங்களை பக்ரைனின் வீராங்கனைகள் பிடித்தனர். இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை சைனி அஜித் மார்கோஸ் (4 நிமிடம், 17.12 வினாடி) ஐந்தாவது இடம் பிடித்தார்.

டென்னிஸ் போட்டியில் வெள்ளி

ஆண்களுக்கான டென்னிஸ் இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் சனம் சிங், சாகேத் மைனேனி ஜோடி, தென் கொரியாவின் யங்யு லிம், ஹியான் சுங் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 6-7, 6-7 என்ற நேர் செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்து, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. இரட்டையர் பிரிவுக்கான வெண்கலப் பதக்கத்தை இந்தியாவின் யூகி பாம்ப்ரி, திவிஜ் சரண் ஜோடி வென்றது.

மல்யுத்தம் வெள்ளி

ஆண்களுக்கான மல்யுத்தம் 'பிரீஸ்டைல்' 74 கி.கி., எடைப்பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் பஜ்ரங், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மங்கோலியாவின் டமன்பிலக்கை வீழ்த்தினார். பின், காலிறுதியில் தஜிகிஸ்தானின் உஸ்மோன்ஜோடாவை வீழ்த்திய பஜ்ரங், அரையிறுதியில் ஜப்பானின் டகட்சுகாவை தோற்கடித்தார். அடுத்து நடந்த பைனலில், கடைசி வரை போராடிய பஜ்ரங் 4-6 என ஈரானின் மசோவ்திடம் தோல்வி அடைந்து, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

மல்யுத்தம் வெண்கலம்:

ஆண்களுக்கான மல்யுத்தம் 'பிரீஸ்டைல்' 74 கி.கி., எடைப்பிரிவில் நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், இந்தியாவின் நார்சிங் யாதவ் 10-7 என ஜப்பானின் ஷிமடாவை வீழ்த்தி, வெண்கலம் வென்றார்.

பதக்கப் பட்டியல்

ஆசியவிளையாட்டுப்போட்டியில் பத்தாவது நாளான இன்று 5 வது தங்கம் கிடைத்ததன் மூலம் பதக்கப் பட்டியலில் முன்னேறியுள்ளது. இதுவரை இந்தியாவிற்கு 41 பதங்கங்கள் கிடைத்துள்ளன.

Story first published: Monday, September 29, 2014, 18:41 [IST]
Other articles published on Sep 29, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+