Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரியோ ஒலிம்பிக்ஸ்: பார்க் மைதானத்தில் ஸ்பைடர் கேமரா கீழே விழுந்து விபத்து.. 7 பேர் காயம்

ரியோ: ரியோ ஒலிம்பிக்ஸ் பார்க் மைதானத்தில் ஸ்பைடர் கேமரா விழுந்து விபத்து ஏற்பட்டதில் 7 பேர் காயம் அடைந்தனர்.

ஒலிம்பிக்ஸ் பார்க் மைதானத்தில் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டிகளின் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில் ஸ்பைடர் கேமராக்கள் மூலம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பார்க் மைதானத்தில் சுமார் 60 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கும் இந்த ஸ்பைடர் கேமராவின் திடீரென விழுந்து ஏற்பட்டது. இதனால் கேமிரா மைதானத்தில் விழுந்தது. இதில் 7 பேர் லேசான காயம் அடைந்தனர். கேமராவின் வயர் அறுந்ததினாலேயே விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் ஒரு பெண்ணிற்கு காயம் ஏற்பட்டத்தில் மூக்கில் ரத்தம் சொட்டியது. இதைத்தொடர்ந்து, காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் காயமடைந்தவர்களில் இரண்டு சிறுவர்களும் அடங்குவர்.

ஏற்கனவே விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மைதானத்தின் அருகே பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில் தற்போது மைதானத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Story first published: Tuesday, August 16, 2016, 17:18 [IST]
Other articles published on Aug 16, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+