Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொல்கத்தா அணியைத் தொடர்ந்து டிரினாட் அணியையும் விலைக்கு வாங்கினார் ஷாரூக்கான்

மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான இந்தி நடிகர் ஷாரூக்கான், கரீபியன் லீக் டி20 தொடரில் விளையாடும் டிரினாட் அண்ட் டொபாக்கோ அணியையும் விலைக்கு வாங்கியுள்ளார்.

இந்திய ஐ.பி.எல். அணிகளைப் போல கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான அணிகளை வாங்கவும் போட்டி இருந்தது. பொல்லார்ட் தலைமையிலான பார்படோஸ்டிரை டென்டீஸ் அணியை ஹாலிவுட் நடிகர் மார்க் ஹல்பெர்க் வாங்கினார்.

Shahrukh Khan buys Caribbean Premier League team Trinidad & Tobago

கிரிக்கெட் புயல் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா டீமை மற்றொரு ஹாலிவுட் நடிகர் ஜெரார்டு பட்லர் வாங்கியிருந்தார். இவர்களைப் போல பிராவோ, காலிஸ், டாரன் பிராவோ, போத்தா, கெவின் கூப்பர், கமரன் அக்மல் ஆகியோரை உள்ளடக்கிய டிரினாட் அண்ட் டொபாக்கோ அணியை இந்தி நடிகர் ஷாரூக்கான் வாங்கியுள்ளார்.

இந்த அணி இதுவரை 3 முறை சாம்பியன் பட்டமும் வென்றுள்ளது. இது குறித்து ஷாரூக் கூறுகையில், உலகம் முழுவதும் கிரிக்கெட்டை விரிவாக்கம் செய்யவேண்டு என்பது இலக்கு. இதற்காக டிரினிடாட் அண்ட் டொபாக்கோ அணியை வாங்கி உள்ளேன் என்றார்.

டிரினாட் அண்ட் டொபாக்கோவில் 38% பேர் இந்திய வம்சாவளியினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, June 10, 2015, 18:02 [IST]
Other articles published on Jun 10, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+