Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் ஒரு காதல் முறிவு.. எமிலியின் கதை 'ஓவர்'.. அடுத்து வார்னே சுழலில் சிக்கப் போவது யாரோ....?

சிட்னி: கிரிக்கெட் ஜாம்பவான் ஷான் வார்னே மீண்டும் ஒரு காதல் முறிவுக்கு வந்துள்ளார். இந்த முறை அவர் சில காலமாக காதலித்து வந்து எமிலி ஸ்காட்டை விட்டு விலகியுள்ளார். இருவரும் வேறு வேறு வாழ்க்கைச் சூழலுக்கு வந்துள்ளதால் காதலை முடித்துக் கொண்டுள்ளதாக வார்னே கூறியுள்ளார்.

இந்தக் காதலின் ஆயுசு 3 மாதமாகும். அதற்குள்ளாகவே இவர்களின் ரொமான்ஸ் முடிவுக்கு வந்துள்ளது.

வார்னே கிரிக்கெட்டில் ஏகப்பட்ட விக்கெட்களை வீழ்த்தியவர். அதேபோல தனிப்பட்ட வாழ்க்கையில் ஏகப்பட்ட காதலிகளுடன் வாழ்க்கையும் நடத்தியவர் இவருக்கு மொத்தமாக 3 குழந்தைகள் உள்ளனர். ஆனாலும் இவரது ரொமான்ஸ் வாழ்க்கை மட்டும் முடிவே இல்லாமல் நீண்டு வந்தது.

3 மாத காதல்...

3 மாத காதல்...

பிளேபாய் பத்திரிகைக்கு மாடலாக இருந்து வந்தவரான எமிலி ஸ்காட்டுடன் கடந்த 3 மாதமாக காதலில் ஈடுபட்டிருந்தார் வார்னே. தற்போது அதை முடித்து விட்டார்.

குழந்தை ஆசை...

குழந்தை ஆசை...

இதற்கான காரணம் என்ன தெரியுமா.. வார்னே மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள எமிலி ஆசைப்பட்டதே. அதை தான் விரும்பவில்லை என்றும், தனக்கு ஏற்கனவே உள்ள குழந்தைகள் போதும் என்றும் வார்னே கூறுகிறார்.

காதலுக்கு வயதில்லை...

காதலுக்கு வயதில்லை...

வார்னேவுக்கு 45 வயதாகிறது. அவரை விட 15 வயது இளையவர் எமிலி. ஆனால் இந்த வயது வித்தியாசத்தையும் தாண்டி இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

நண்பர்களாக பிரிகிறோம்...

நண்பர்களாக பிரிகிறோம்...

எமிலி குறித்து வார்னே கூறுகையில், எமிலி மிகவும் கூலானவர், அழகானவர், புத்திசாலியானவர், செக்ஸியானவர்.. எல்லாமே அவரிடம் உண்டு. ஆனால் அவர் வேறு பாதையில் உள்ளார். நான் என் பாதையில் போக விரும்புகிறேன். எனவே நண்பர்களாக இருவரும் பிரிந்துள்ளோம் என்றார்.

3 குழந்தைகள்...

3 குழந்தைகள்...

வார்னேவுக்கு 17 வயதில் ப்ரூக், 12 வயதில் சம்மர் என இரு மகள்களும் 14 வயதில் ஜாக்சன் என்ற மகனும் உள்ளனர். இந்த மூவருமே அவரது முதல் திருமணத்தின் மூலம் பிறந்தவர்கள் ஆவர்.

காதல் வளர்த்தனர்...

காதல் வளர்த்தனர்...

3 மாத காதலில் வார்னேவும் எமிலியும் ஒரு நாள் கூட இடைவெளி விடாமல் காதலை வெளிப்படுத்தி வந்தனர். நேரிலும், டிவிட்டர் மூலமும் இருவரும் காதலை வளர்த்து வந்தனர். ஆனால் குழந்தை வேண்டும் என்று எமிலி கூறியதால் அதிருப்தி அடைந்தார் வார்னே. இதுவே இப்போது பிரிவு வரை போய் விட்டது.

முந்தைய காதல்...

முந்தைய காதல்...

இதற்கு முன்பு இப்படித்தான் நடிகை எலிசபெத் ஹர்லியுடன் சீரியஸாக காதலில் ஈடுபட்டிருந்தார் வார்னே. அவர் வார்னேவை திருமணம் செய்ய விரும்பியதால் அவரை பிரிந்தார் வார்னே. இந்தக் காதல் 4 மாதம் நீடித்தது. வார்னே மறுத்ததால் பாடகர் ரிச்சி நெவில்லியை மணந்து கொண்டு போய் விட்டார் எலிசபெத் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது எமிலியன் கதை முடிந்தது.. அடுத்து வார்னே சுழலில் சிக்கப் போவது யாரோ....?

Story first published: Sunday, November 2, 2014, 12:17 [IST]
Other articles published on Nov 2, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+