Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷான் வார்னுக்கு பவுலிங் கற்றுத் தந்த குரு டெர்ரி ஜென்னர் மரணம்

Terry Jenner with Shane Warne
சிட்னி: சுழற்பந்து ஜாம்பவான் ஷான் வார்ன் ஒரு தலை சிறந்த லெக் ஸ்பின்னராக உருவெடுக்க காரணமாக இருந்தவரான டெர்ரி ஜென்னர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 66.

தனது கணவரின் மறைவை ஜென்னரின் மனைவி ஆன், தனது பிளாக்கில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆன் கூறுகையில், டெர்ரி அமைதியான முறையில் மரணமடைந்து விட்டார். அவருக்கு மாரடைப்பு வந்து ஒரு ஆண்டு முடிய ஒன்றரை மாதம் இருக்கும் நிலையில் அவர் இறந்து விட்டார். கடைசி நாட்களில் தனது குடும்பத்தினர் உடன் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பியிருந்தார். நாங்களும் அவருடனேயே இருந்தோம். அவரை பலரும் மிஸ் செய்வார்கள். இந்த மரணத்தால் அவருக்கு நிம்மதி கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ஆன்.

ஜென்னருக்குப் பல சிஷயர்கள் இருந்தாலும் அவர்களில் முதன்மையானவர் ஷான் வார்ன்தான். ஆஸ்திரேலியாவுக்காக 1970 முதல் 75 வரை கிரிக்கெட் ஆடியவர் ஜென்னர். 9 டெஸ்ட் போட்டிகளை மட்டுமே அவர் ஆடியுள்ளார். இருப்பினும் மிகச் சிறந்த ஆட்டக்காரராக அப்போது பேசப்பட்டவர்.

எப்படி இன்று வார்ன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறாரோ, அதேபோலத்தான் ஜென்னர் தனது நாட்களில் பல சர்ச்சைகளில் சிக்கியவர்.

சூதாட்டத்திற்கு அடிமையானவர் ஜென்னர். 1988ம் ஆண்டு அவர் சூதாட்டத்தால் ஏற்பட்ட பெரும் கடனைச் செலுத்த முடியாததற்காக கைதும் செய்யப்பட்டார்.

இருப்பினும் ஷான் வார்னின் குருவாக ஜென்னர் மாறிய பிறகு அவரது வாழ்க்கையும் மாறியது. மிக்ச சிறந்த சுழற்பந்து வீச்சாளராக வார்ன் இன்று திகழ ஜென்னர்தான் முக்கியக் காரணம். வார்னுக்கு பந்து வீச்சின் நுட்பங்களைக் கற்றுக் கொடுத்து அவரை பட்டை தீட்டியவர் ஜென்னர்தான். வார்ன் ஜொலிக்க ஆரம்பித்தவுடன் ஜென்னரின் பெயரும் வேகமாக பிரபலமானது.

வார்னுடன் சேர்ந்த பிறகு ஜென்னரும் நிறைய மாறினார். இதை கடந்த ஆண்டு அவரே ஒப்புக் கொண்டார். வார்னுடன் இணைந்ததன் மூலம் நிறைய மாற்றங்களை நான் சந்தித்தேன். மக்களிடம் நற் பெயரை சம்பாதிக்க நான் போராடிய காலம் உண்டு. ஆனால் வார்னுடன் இணைந்த பிறகு அது என்னைத் தேடி வந்தது என்றார்.

1992 முதல் 2010 வரை கிரிக்கெட் பயிற்சியாளராக, டிவி வர்னணையாளராக பிசியாக இருந்து வந்தார் ஜென்னர். 2010ம் ஆண்டு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அவரது உடல் நலம் குன்ற ஆரம்பித்தது. படிப்படியாக மோசமடைந்து வந்த நிலையில், மே 25ம் தேதி அதிகாலை 12.15 மணிக்கு உயிர் பிரிந்தது.
Story first published: Thursday, June 7, 2012, 9:36 [IST]
Other articles published on Jun 7, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+