சாந்தனு நினைச்சிருந்தா ஜெயிச்சிருக்கலாம்.. ஆனா நினைக்கலையேப்பா!
பெங்களூர்: கர்நாடக புல்டோஸர்கள் அணிக்கு எதிரான சென்னை ரைனோஸ் அணியின் சிசிஎல் போட்டி டை ஆனதற்கு காரணம் என்று பார்த்தால் சென்னை அணியின் பந்து வீச்சாளர் நடிகர் சாந்தனுவைக் கை காட்டலாம். காரணம். பார்ட்டி போட்ட சொதப்பல் பந்து வீச்சால்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டியை டையில் கொண்டு முடித்து விட்டார் சாந்தனு.
கடைசி ஓவரின்போது சாந்தனு பெரும் சொதப்பு சொதப்பி விட்டார். அதாவது சூப்பராக வைக்கப்பட்ட பொங்கலுக்குள் விரலை விட்டு ஆட்டி அதை பழைய சாதம் போல மாற்றி விட்டார்.
சற்று புத்திசாலித்தனமாக அவர் பந்து போட்டிருந்தால் நிச்சயம் சென்னைக்கு ஜெயம் கிடைத்திருக்கும்..

கடைசி ஓவரில் திகு திகு
இப்போட்டியில் கடைசி ஓவரில் கர்நாடகா புல்டோஸர் அணி 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை.

சாந்தனு கையில் பந்து
சாந்தனுதான் பந்து வீசினார். கடைசி ஓவரில் களத்தில் நின்றவர்கள் மகேஷும், பாஸ்கரும். இதில் இந்த பாஸ்கர்தான் கடைசி நேரத்தில் சற்றே சுதாரித்து ஆடி போட்டியை டைக்குக் கொண்டு போனவர். சாந்தனுவின் சுதாரிப்பில்லாத பந்து வீச்சை அவர் கர்நாடகாவுக்கு சாதகமாக்கிக் கொண்டார்.

10 பந்துகளில் 20 ரன்கள்
பாஸ்கர் 10 பந்துகளைச் சந்தித்து 20 ரன்களை எடுத்தார். மகேஷ் ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்தார்.

நல்லாத்தான் போனது
சாந்தனுவின் பந்துகளைச் சந்திக்க ஆரம்பத்தில் கர்நாடக வீரர்கள் தடுமாறத்தான் செய்தனர். இதனால் கடைசி 2 பந்துகளில் 14 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை.

பாஸ்கர் போட்ட சிக்ஸ்
அதில் முதல் பந்தில் பாஸ்கர் சிக்ஸர் அடித்து விட்டார். இதனால் கடைசிப் பந்தில் 8 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை.

சுதாரிச்சிருக்கலாமே பாஸ்
இந்தப் பந்தை சற்று கவனமாக போட்டிருந்தாலே போதும். ஆனால் நோ பால் போட்டு விட்டார் சாந்தனு. இதனால் எக்ஸ்ட்ரா பந்து கிடைத்து விட்டது. அந்த கூடுதல் பந்தில் ஒரு சிக்ஸர் அடிக்க மேட்ச் டை ஆனது.

கிச்சாவின் பாராட்டு
ஆனால் சென்னை அணியின் ஆட்டத்தை கர்நாடக அணியின் கேப்டன் கிச்சா சுதீப் பாராட்டத் தவறவில்லை. செய்தியாளர்கள் சந்திப்பின்போது, சென்னை ரைனோஸ் அணி வலுவானது. அவர்களுக்கு எதிராக விளையாடுவதை நாங்கள் எப்போதுமே விரும்புவோம். இரு அணிகளின் ரசிகர்களுக்குமே நாங்கள் விருந்து படைக்கும் வகையிலேயே ஆடுகிறோம் என்றார்.


Click it and Unblock the Notifications