For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சரண்டரான சரத் கமல் - மனிகா ஜோடி.. துளி சவால் இன்றி தோல்வி - பெரும் அதிருப்தி

டோக்கியோ: இந்தியாவின் மற்றொரு முக்கிய நம்பிக்கை வீணாகியிருக்கிறது. ஆம்! டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா வெளியேறிவிட்டது.

பதக்கங்களுக்கான ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கிவிட்டன. காலையிலேயே ஒரு கோல்டு மெடலை வென்று அசத்தியிருக்கிறது சீனா. இந்த ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்கம் இதுதான்.

துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்றுள்ளார் சீன வீராங்கனை யாங் கியான். சரி இந்தியாவின் நிலைமை என்னவென்று பார்ப்போம்.

தங்கப் பதக்கம்

தங்கப் பதக்கம்

இன்று காலை முதல் இந்திய அணி மாறி மாறி வெற்றி தோல்விகளை சந்தித்து வருகிறது. பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில், இந்தியாவின் இளவேனில் வாலறிவன் மற்றும் அபூர்வி சண்டேலா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான முதல் 8 இடங்களுக்குள் இடம் பெற தவறினார்கள். இந்த துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தான் சீனா தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.

ஹாக்கியில் அபாரம்

ஹாக்கியில் அபாரம்

இதைத் தொடர்ந்து, நடந்த வில்வித்தை போட்டி கலப்பு அணிகள் பிரிவு வெளியேற்றுதல் சுற்றில், இந்தியாவின் பிரவீன் ஜாதவ் - தீபிகா குமாரி இணை காலிறுதிக்கு முன்னேறியது. இதில், 5-3 என்ற கணக்கில் சீன-தைபே அணியை வென்று இந்தியா காலிறுதிக்கு முன்னேறியது. இதையடுத்து, இந்தியா - நியூசிலாந்து ஆண்கள் ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில், 3-2 என்று கோல் கணக்கில் இந்தியா அபாரமாக வெற்றிப் பெற்றது.

சுஷிலா தோல்வி

சுஷிலா தோல்வி

அதேசமயம், இன்று நடைபெற்ற ஜுடோ போட்டியில் இந்தியாவின் சார்பில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில், சுஷிலா தேவி - ஹங்கேரியின் எவா செர்னோ விக்கி ஆகியோர் மோதினர். இந்தியா சார்பில் ஜுடோ விளையாட்டில் கலந்து கொண்ட ஒரே போட்டியாளர் சுஷிலா மட்டும் தான். ஆனால், எவாவிடம் அவர் தோற்று வெளியேறினார்.

சறுக்கிய சரத் - மனிகா ஜோடி

சறுக்கிய சரத் - மனிகா ஜோடி

இதைத் தொடர்ந்து, டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்திய அணி களமிறங்கியது. இந்தியா மெடல் வெல்லும் என்று ஸ்ட்ராங்காக கணிக்கப்பட்ட மற்றொரு விளையாட்டு டேபிள் டென்னிஸும் ஒன்று. இன்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் மனிகா பத்ரா- சரத்கமல் ஆகியோர் பங்கேற்றனர். சீன தைபேயின் லின் யன் ஜூ-செங்கு ஜிங்குவுடன் இவர்கள் மோதினர். இதில், 8-11, 6-11, 5-11, 4-11 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து வெளியேறியது இந்திய இணை. இந்த போட்டியில், பெரிய அளவில் இந்திய அணியால் சவால் அளிக்கவே முடியவில்லை என்பது சோகமான விஷயமாகும். இதைத்தொடர்ந்து, பெண்கள் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா - இங்கிலாந்தின் ஹோ டின்னுடன் இன்று மோதுகிறார். மற்றொரு போட்டியில் சுதிர்தா முகர்ஜி - சுவீடனின் லின்டா பெர்ஜிஸ்டிரோமுடன் மோதுகிறார்.

Story first published: Saturday, July 24, 2021, 14:17 [IST]
Other articles published on Jul 24, 2021
English summary
Sharath Kamal, Manika Batra table tennis Round - சரத் கமல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+