Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர் ஐடி கார்டைத் தொலைக்க.. அவர் கண்டுபிடிச்சுக் கொடுக்க.. பிறகென்ன... மலர்ந்தது காதல்!

ரியோ டி ஜெனீரோ: ஒவ்வொரு வீரர் வீராங்கனையின் கனவு ஒலிம்பிக்.. மெடல் கொடுத்தால்.. அது பேரின்பம். அமெரிக்க நீச்சல் வீராங்கனை அப்பி ஜான்ஸ்டனுக்கும் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பது அப்படித்தான். ஆனால், இவருக்குள் ஒரு அழகான காதல் கதையும் பொதிந்திருக்கிறது.. அந்தக் காதலுடன் பிரேசில் வந்துள்ளார் அப்பி.

அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை அப்பி. டைவிங் பிரிவில் பங்கேற்கிறார். ரியோ ஒலிம்பிக்கில் தனது முத்திரையப் பதிக்க காத்திருந்தபோதுதான் இவரை காதல் வந்து தாக்கியதாம்.

அது ஒரு அழகான விபத்து என்று கூறிச் சிரிக்கிறார் அப்பி. நான் சத்தியமாக இப்படி ஒன்று நடக்கும் என்பதையே நினைத்துக் கூட பார்க்கவில்லை. எல்லாமே தற்செயலாக நடந்தது என்கிறார் அப்பி.

2 வாரத்திற்குப் பின்பு

2 வாரத்திற்குப் பின்பு

அமெரிக்க ஒலிம்பிக் அணிக்கான டிரையல்ஸ் முடிந்த அடுத்த 2 வாரத்தில், அதாவது ஜூன் மாதக் கடைசியில்தான் காதலில் விழுந்தார் அப்பி. அவரிடம் முதலில் காதலைச் சொன்னது அவரது காதலரான சாம் மெக்கிராத்.

தொலைந்து போன ஐடி!

தொலைந்து போன ஐடி!

இதுகுறித்து அப்பி கூறுகையில், நான் எனது ஐடி கார்டை பார்க்கிங் பகுதியில் தொலைத்து விட்டேன். அதைத் தேடிக் கொண்டிருந்தபோதுதான் இவர் வந்து அதைக் கண்டுபிடித்தார். ஆனால் அதை அவர் என்னிடம் கொடுத்த விதம்தான் ரொம்ப அழகானது என்று கூறி வெட்கப்படுகிறார் அப்பி.

வெள்ளி வென்ற

வெள்ளி வென்ற "தங்கம்"

அப்பிக்கு இது 2வது ஒலிம்பிக் போட்டியாகும். ஏற்கனவே 2012 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று 3 மீட்டர் சின்க்ரனைஸ்ட் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் அப்பி. இப்பிரிவில் 12 வருடமாக மெடலே வாங்காமல் இருந்தது அமெரிக்கா. அதை முறியடித்து முடிவுக்குக் கொண்டு வந்தவர் அப்பி.

அப்பறம்

அப்பறம்

அப்பி மேலும் கூறுகையில், எனக்கு அவர் ஒரு இமெயில் அனுப்பினார். நானும் பதிலளித்தேன். அடுத்த நாள் சந்தித்தோம். என்னைப் போலவே அவரும் சிந்தித்ததை உணர்ந்தேன். அவர் ரொம்ப க்யூட். டேட்டிங்குக்கு கேட்டார். நானும் சரி என்றேன்.

கனக்டிகட் கடற்கரையில்

கனக்டிகட் கடற்கரையில்

பிறகு கனக்டிகட் கடற்கரையில் அவரும் நானும் சேர்ந்து வாக்கிங் போனோம், நிறையப் பேசினோம். அப்போது ஒரு சூரிய காந்திப் பூவைப் பார்த்தேன். எனக்கு அது ரொம்பப் பிடிக்கும். எஸ்.. அவருக்கும் பிடித்திருந்தது.

அசத்திட்டீங்க பாஸ்!

அசத்திட்டீங்க பாஸ்!

அப்போது அந்தப் பூவை உற்றுப் பார்த்தபோது அதன் மேல் ஏதோ ஒன்று இருந்தது. என்ன என்று நெருங்கிப் பார்த்தபோதுதான் அது எனது ஐடி கார்டு என்று தெரிந்தது. மேலும் நெருங்கிப் பார்த்தபோது எனது பெயருடன், அவரது பெயரை இணைத்து எழுதியிருந்தார்.. எனக்கு வந்த சந்தோஷத்தை அளவிட எந்த அளவுகோலும் கிடையாது.

அப்படியே திரும்பினேன்.. முழங்காலிட்டபடி அவர்!

அப்படியே திரும்பினேன்.. முழங்காலிட்டபடி அவர்!

அதே சந்தோஷத்தோடு அப்படியே அவரை நோக்கித் திரும்பினேன். ஆளைக் காணவில்லை... கீழே ஒற்றை முழங்காலிட்டபடி என்னை நோக்கி பூ ஒன்றைக் கொடுத்து ஐ லவ்யூ என்றார். எனக்குப் பேச்சே வரவில்லை.. !

படிப்பு முடிந்ததும்.. டும் டும்!

படிப்பு முடிந்ததும்.. டும் டும்!

ஒலிம்பிக் போட்டி முடிந்ததும் எனது மருத்துவப் படிப்பை முடிக்க வேண்டும். பிறகு திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளோம் என்றார் அப்பி.

கால்பந்து பயிற்சியாளர்

கால்பந்து பயிற்சியாளர்

அப்பியின் காதலர் மெக்கிராத் ஒரு கால்பந்து பயிற்சியாளர் ஆவார். டியூக் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். அப்பி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும்போது அதைப் பார்க்க வரத் திட்டமிட்டுள்ளாராம்.

Story first published: Thursday, August 4, 2016, 13:09 [IST]
Other articles published on Aug 4, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+