Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வில்வித்தையில் இந்தியாவுக்கு வெள்ளி.. ஆசிய பாரா விளையாட்டில் ஷீத்தல் தேவி, பாயல் நாக் ஜோடி அபாரம்

நகோயா: ஜப்பானின் நகோயா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் ஷீத்தல் தேவி மற்றும் பாயல் நாக் ஜோடி வில்வித்தையில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

மகளிருக்கான காம்பவுண்ட் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் தரவரிசைச் சுற்றில் முதலிடம் பிடித்து அசத்திய இந்திய வீராங்கனைகள் ஷீத்தல் தேவி - பாயல் நாக் இணை, தங்கப் பதக்கத்திற்கான மோதலில் பலம் வாய்ந்த சீன ஜோடியை எதிர்கொண்டது. சீனாவின் சூசிங் சூ, ஜிங் ஜாவ் ஜோடி தொடக்கம் முதலே மிகத் துல்லியமாக அம்புகளை எய்து 150 புள்ளிகள் குவித்து தங்கத்தை தட்டிச் சென்றது.

Sheetal Devi and Payal Nag Win Silver in Archery at Asian Para Games 2026

இந்திய வீராங்கனைகள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்திய போதும், 141 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 141-150 என்ற புள்ளிக் கணக்கில் போராடித் தோற்ற இந்திய ஜோடி வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தியது. இந்த பிரிவில் ஏற்கனவே 157 புள்ளிகள் குவித்து உலக சாதனை படைத்துள்ள இந்தியாவுக்கு இம்முறை தங்கம் கைநழுவியது. எனினும், நடப்பு தொடரில் வில்வித்தை பிரிவில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

19 வயதான ஷீத்தல் தேவி, 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியாவின் இளம் நட்சத்திரம் ஆவார். அவருடன் களம் கண்ட மற்றொரு வீராங்கனையான பாயல் நாக், ஒடிசாவின் பலாங்கீர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தனது 8 வயதில் மின் விபத்தில் 4 கைகால்களையும் இழந்த நிலையிலும், பயிற்சியாளர் குல்தீப் வேத்வானிடம் பயிற்சி பெற்று இந்த இமாலய சாதனையை எட்டியுள்ளார்.

ஆசிய பாரா விளையாட்டு.. இந்தியாவுக்கு 10-வது தங்கம்.. குண்டு எறிதலில் மிரட்டிய ஆயுஷ் வர்மா

ஆசிய பாரா விளையாட்டு.. இந்தியாவுக்கு 10-வது தங்கம்.. குண்டு எறிதலில் மிரட்டிய ஆயுஷ் வர்மா

தடகளத்திலும் பதக்க வேட்டை

ஆண்களுக்கான 100 மீட்டர் டி35 தடகளப் போட்டியில் இந்திய வீரர் அனுபவ் சவுத்ரி 12.72 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து புதிய தனிநபர் சாதனையுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். அதேபோல் மகளிருக்கான 100 மீட்டர் டி12 ஓட்டத்தில் களமிறங்கிய சிம்ரன் சர்மா, 12.13 வினாடிகளில் இலக்கை எட்டிப் பிடித்து புதிய ஆசிய பாரா விளையாட்டு சாதனையுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இவர் நேற்று 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி, இந்தியா மொத்தம் 37 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 6-வது இடத்தில் நீடிக்கிறது.

Story first published: Wednesday, October 21, 2026, 8:01 [IST]
Other articles published on Oct 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+