Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சானியா மட்டும் ஓவியமா?: ஷிகா ஓபராய்

கொல்கத்தா:

சானியா மிர்ஸாவுக்கு மட்டும் பத்திரிக்கைகள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால்மற்ற வீரர், வீராங்கனைகள் கண்டுகொள்ளப்படாமல் போகின்றனர் என்று வளர்ந்துவரும் டென்னிஸ் வீராங்கனையான ஷிகா ஓபராய் பொறுமியுள்ளார்.

வெளிநாடு வாழ் இந்திய வீராங்கனையான ஷிகா ஓபராய், டென்னிஸில் வேகமாகவளர்ந்து வருகிறார். சானியாவுக்கு அடுத்து இவர்தான் அதிகம் பேசப்படுகிறார்.இருப்பினும் தனக்கும் மற்ற வீரர், வீராங்கனைகளுக்கும் இந்திய மீடியாக்கள் அதிகமுக்கியத்துவம் தருவதில்லை, எல்லாம் சானியாவை மட்டும் தலையில் தூக்கி வைத்துஆடி வருவதாக குறைபட்டுக் கொண்டுள்ளார் ஷிகா.

கொல்கத்தாவில் நடந்து வரும் சன்பீஸ்ட் ஏடிபி மகளிர் டென்னிஸ் போட்டியில் கலந்துகொண்டுள்ள ஷிகா ஓபராய் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சானியா மிர்ஸாவுக்கு இந்திய மீடியாக்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றன. அவர்என்ன செய்தாலும் அதை பெரிதாக செய்தி வெளியிடுகிறார்கள்.

Shika Uberoi

சானியாவுக்கு இப்படி அதிக முக்கியத்துவம் தரப்படுவதால், திறமை வாய்ந்த மற்றவீரர், வீராங்கனைகள் அறியப்படாமல் போய் விடுகிறார்கள். வளர்ந்து வரும் வீரர்,வீராங்கனைகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுகிறது.

Shika Uberoi

எனவே மீடியாக்கள் தயவு செய்து பாரபட்சம் காட்டாமல் செய்தி வெளியிடவேண்டும். சானியாவுக்கு தரும் அதே முக்கியத்துவத்தை மற்ற வீரர்,வீராங்கனைகளுக்கும் வழங்க வேண்டும்.

Shika Uberoi

திறமையானவர்களை வெளிக் கொண்டு வர மீடியா உதவ வேண்டும் என்றார் ஷிகாஓபராய்.

Story first published: Wednesday, December 7, 2011, 17:48 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+