
டெல்லி கேபிடல்சில் விளையாடும் தவான்
இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரிலிருந்து இந்திய அணியில் இடம்பெறாமல் உள்ளார். ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிவந்த ஷிகர், 2018 சீசனுக்கு பிறகு டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு 19 போட்டிகளில் விளையாடி 521 ரன்களை குவித்துள்ளார் ஷிகர் தவான்.

யூஏஇயில் நடைபெறுகிறது
ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 முதல் யூஏஇயில் நடைபெறவுள்ளது. இன்னும் இதுகுறித்து தேதிகளை முழுமையாக பிசிசிஐ அறிவிக்கவில்லை. ஆயினும் வீரர்கள் தங்களை ஐபிஎல் போட்டிகளுக்காக மனதளவில் தயார் படுத்தி வருகின்றனர். இதுவரை 159 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஷிகர் தவான், 4,579 ரன்களை குவித்துள்ளார்.

வீட்டில் பொழுதுபோக்கு
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக வீட்டில் முடங்கியுள்ள ஷிகர் தவான், தன்னுடைய குடும்பத்தினருடன் குறிப்பாக மகன் சரோவருடன் அதிகளவில் பொழுதை போக்கி வருகிறார். இருவரும் இணைந்த பல்வேறு புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். கடந்த வாரத்தில் இவர்கள் இருவரும் இணைந்து மூக்கில் ரிங்கை போட்டுக் கொண்டு புகைப்படம் வெளியிட்டிருந்தனர்.

ஷிகர் தவான் புகைப்படம்
இந்நிலையில் தற்போது தன்னுடைய மகனை படுக்கையில் இருந்து எழுப்பும்படியான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஷிகர் தவான். தினமும் சரோவரை படுக்கையில் இருந்து எழுப்புவது கடினமான காரியம் என்றும் தன்னுடைய பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications