டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் துணைத் தலைவர் சிவ்லால் யாதவ் மீது மோசடி குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பதால் அவர் நிர்வாக விவகாரங்களில் தலையிட கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஐ.பி.எல்.பிக்ஸிங் விவகாரத்தில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாகப் பணிகளை சிவ்லாய் யாதவ் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு அங்கீகரிக்கப்பட்டாத பீகார் கிரிக்கெட் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சிவ்லால் யாதவ் மீது ஆந்திராவில் மோசடி குற்றச்சாட்டு நிலுவையில் இருப்பதால் அவர் எந்த ஒரு பணியையும் மேற்கொள்ளக் கூடாது என்று அதன் செயலர் ஆதித்ய வர்மா கூறியுள்ளார்.
மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் எந்த ஒரு விதியுமே சிவ்லால் யாதவ் வகித்து வரும் "மூத்த துணைத் தலைவர்" என்ற பதவியைப் பற்றி குறிப்பிடவும் இல்லை என்கிறார் ஆதித்ய வர்மா.