Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விளையாடாமலேயே வென்ற ஸ்ரீகாந்த்... பிரெஞ்ச் ஓபனில் இந்தியா சூப்பர் ஓபனிங்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் போட்டியில் தங்களுடைய முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்து, சாய்னா நெஹ்வால், எச்.எஸ். பிரனாய், பி. சாய் பிரனீத் வென்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர். அதே நேரத்தில் விளையாடாமலேயே கிடாம்பி ஸ்ரீகாந்தும் முன்னேறினார்.

சூப்பர் சீரியஸ் பாட்மின்டன் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் போட்டிகள், பாரிஸில் நடந்து வருகிறது.

இந்தியாவின் பி.வி. சிந்து சாய்னா நெஹ்வால், எச்.எஸ். பிரனாய், பி. சாய் பிரனீத் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

இரண்டாவது சுற்றில் ஸ்ரீகாந்த்

இரண்டாவது சுற்றில் ஸ்ரீகாந்த்

சமீபத்தில் டென்மார்க் ஓபன் பட்டம் வென்ற ஸ்ரீகாந்த், முதல் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் பேபியான் ரோத்தை சந்தித்தார். முதல் கேமில் 3-0 என்று ஸ்ரீகாந்த் முன்னிலையில் இருந்தபோது, காயம் காரணமாக ரோத் வெளியேறினார். அதனால், ஸ்ரீகாந்த் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

சிந்துவுக்கு சுலப வெற்றி

சிந்துவுக்கு சுலப வெற்றி

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பி.வி. சிந்து, முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் பியாட்ரிஸ் கோர்ரலெஸ்ஸை 21-19 21-18 என்ற செட்களில் வென்றார்.

சாய்னாவுக்கு சவால்

சாய்னாவுக்கு சவால்

உலக சாம்பியன் போட்டியில் வெண்கலம் வென்ற சாய்னா நெஹ்வால், டென்மார்க்கின் லினே ஹோஜ்மார்க்கை 21-14, 11-21, 21-10 என்ற செட்களில் வென்றார். டென்மார்க் ஓபன் போட்டியில் காலிறுதியில் தன்னை வென்ற ஜப்பானின் அகினே யாமகூச்சியை அடுத்த சுற்றில் சந்திக்கிறார்.

பிரனாய், பிரனீத் முன்னேற்றம்

பிரனாய், பிரனீத் முன்னேற்றம்

டென்மார்க் ஓபன் போட்டியின் இறுதியில் ஸ்ரீகாந்திடம் தோல்வியடைந்த கொரியாவின் 37 வயது லீ ஹூவானை, 21-15, 21-17 என்ற செட்களில் அமெரிக்க ஓபன் சாம்பியனான பிரனாய் வென்றார். தாய்லாந்து வீரர் கோஷிட் பெட்பிரடாபை 21-13. 21-23. 21-19 என்ற கணக்கில் வென்றார் பிரனீத்.

இரட்டையரிலும் வெற்றி

இரட்டையரிலும் வெற்றி

மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா, என்.சிக்கி ரெட்டி ஜோடி முதல் சுற்றில் வென்றது. அதே நேரத்தில் மனு அத்ரி, சுமீத் ரெட்டி ஜோடி தோல்வியடைந்தது. ஆடவர் ஒற்றையரில் பி. கஷ்யப் முதல் சுற்றில் தோல்வியடைந்தார்.

Story first published: Thursday, October 26, 2017, 17:45 [IST]
Other articles published on Oct 26, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+