
பங்குபெறும் நாடுகள்
சென்னை ரசிகர்களை மகிழ்விக்க முதல்முறையாக அரங்கேறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், லாவோஸ், உஸ்பெகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகளும், பெண்கள் பிரிவில் குயாம், பிலிப்பைன்ஸ், ஈரான், உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, இந்தியா ஆகிய அணிகளும் கலந்து கொள்கின்றன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டி நடைபெறுகிறது.

ஒலிம்பிக்கில் பங்கேற்பு
ஆடவர், மகளிர் என இருதரப்பினரும் பங்கேற்கும் இந்தப் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணி அடுத்த ஆண்டு பிரேசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் தகுதிச்சுற்றுக்கு முன்னேறும்.

சிவகார்த்திக்கேயன் நியமனம்
இந்த விளையாட்டை இளைஞர்களின் மத்தியில் பிரபலப்படுத்த இந்த போட்டிக்கு பிராண்ட் அம்பாசிடர் ஆக நடிகர் சிவகார்த்திகேயன் அதிகாரபூர்வ பிராண்ட் அம்பாசிடராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ரக்பி செவன் டீம்
சிவகார்த்திகேயன் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குபெறும் 'ரக்பி செவன் டீம்' என்ற அணிக்கு பிராண்ட் அம்பாசிடராக செயல்படவுள்ளார்.

ஒலிம்பிக்கில் தகுதி பெறுமா?
சினிமாவில் பிரபல நடிகர் அந்தஸ்தை பெற்ற பிறகு சிவகார்த்திக்கேயனுக்கு கிடைத்திருக்கும் பெருமையான பதவியாகும். சிவகார்த்திகேயன் அம்பாசிடராக நியமிக்கப்பட்ட இந்திய அணி, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று சாம்பியன் பட்டம் பெறுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











