Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சோகமான WWE ரசிகர்கள்.. முன்னாள் சாம்பியன் சிட் விசியஸ் காலமானார்.. கேன்சருடன் போராடி தோல்வி

நியூயார்க்: முன்னாள் டபுள்யூ.டபுள்யூ.ஈ (WWE) சாம்பியன் சிட் விசியஸ் காலமானார். அவரது மறைவை அறிந்து டபுள்யூ.டபுள்யூ.ஈ ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். 63 வயதான நிலையில் சிட் யூடி என்ற இயற்பெயரைக் கொண்ட சிட் விசியஸ் காலமானார். அவர் பல ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதனுடன் போராடி வந்தார்.

இந்த நிலையில் தனது 63 வது வயதில் அவர் காலமானார். அவர் ஆறு முறை உலக ரெஸ்லிங் சாம்பியனாக இருந்திருக்கிறார் டபுள்யூ.டபுள்யூ.எஃப் (WWF) சாம்பியன் ஆக இரண்டு முறையும், டபுள்யூ.சி.டபுள்யூ (WCW) உலக ஹெவி வெயிட் சாம்பியன் ஆக இரண்டு முறையும், யூ.எஸ்.டபுள்யூ.ஏ (USWA) யூனிஃபைடு உலக ஹெவி வெயிட் சாம்பியனாக இரண்டு முறையும் இருந்துள்ளார்.

wwe wrestling

இவர் இரண்டு ரெஸ்ஸில்மேனியா தொடர்களின் முக்கிய போட்டியில் பங்கேற்று இருக்கிறார். டபிள்யூ.டபிள்யூ.ஈ -இல் மூன்று விதமான பெயர்களில் இவர் ரெஸ்லிங் போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார். சிட் விசியஸ், சிட் ஜஸ்டிஸ் மற்றும் சைக்கோ சிட் என மூன்று பெயர்களில் இவர் ரசிகர்களால் அறியப்படுகிறார்.

உறுதியான உடற்கட்டை கொண்ட சிட் விசியஸ் 6 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவர். 1991இல் டபிள்யூ.டபிள்யூ.ஈ -வில் இணைந்தார். 1992ல் ரெஸ்ஸில்மேனியா-வில் ஹல்க் ஹோகனுடன் இவர் மோதினார். அதேபோல் 1997 இல் ரெஸ்ஸில்மேனியாவின் கடைசி போட்டியில் அண்டர்டேக்கருடன் மோதினார். அந்த இரண்டு போட்டிகளும் இவரது ரெஸ்லிங் வாழ்வில் முக்கியமான போட்டிகளாக அமைந்தன.

சிட் விசியஸ் மறைவுக்கு டபிள்யூ.டபிள்யூ.ஈ நிறுவனம் இரங்கல் தெரிவித்து இருக்கிறது. போட்டிகளில் கடுமையானவராக தன்னை காட்டிக் கொண்டாலும் வெளி உலகில் மிகவும் இனிமையனாவர் என அவரைக் குறித்து பகிர்ந்துள்ளது டபிள்யூ.டபிள்யூ.ஈ நிறுவனம்.

Story first published: Tuesday, August 27, 2024, 17:46 [IST]
Other articles published on Aug 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+