Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாழ்க்கை மல்யுத்தத்திற்கு தயாரான பஜ்ரங் புனியா-சங்கீதா போகத்.சாய்னா நேவால், ராணி ராம்பால் வாழ்த்து

டெல்லி : மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா மற்றும் சங்கீதா போகத் ஆகியோரின் திருமணம் நடைபெற்றுள்ளது.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடைபெற்ற திருமணத்தின் புகைப்படங்களை அவர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இந்நிலையில் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் ஆகியோர் இவர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

Soulmate For Life: Bajrang Punia Marries Sangeeta Phogat

மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா மற்றும் சங்கீதா போகத் ஆகியோரின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இனிதே நடைபெற்றது. இதையடுத்து இந்த நிகழ்வின் புகைப்படங்களை பஜ்ரங் புனியா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் ஆகியோர் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

தொடர்ந்து சங்கீதா போகத்தும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்தார். ஆத்மார்த்த வாழ்க்கை துவங்கியுள்ளதாகவும், இந்த திருமணம் மூலம் புனியா தன்னை முழுமைப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையின் புதிய அத்தியாயம் துவங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்தையொட்டி இந்த தம்பதிக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Friday, November 27, 2020, 13:51 [IST]
Other articles published on Nov 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+