Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென்னாப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட்: 280 ரன்களில் இந்தியா அவுட்!

ஜோகன்னஸ்பெர்க்: தென்னாப்பிரிவுக்கான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இந்திய அணி 280 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரில் தோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து நேற்று டெஸ்ட் போட்டி தொடர் தொடங்கியது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய தொடக்கத்தில் தடுமாறினாலும் விராட் கோஹ்லியின் சதத்தின் மூலம் சரிவில் இருந்து மீண்டது. நேற்று ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்களை எடுத்திருந்தது.

South Afrcia tour: India bowled out for 280

இன்றைய 2வது நாள் ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்திய அணி மீண்டும் தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இதனால் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. கூடுதலாக 25 ரன்கள் எடுப்பதற்குள் எஞ்சிய விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 280 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாப்பிரிக்கா அணியின் மோர்கெலின் பந்துவீச்சுதான் இந்தியாவை சுருட்டியது.

Story first published: Thursday, December 19, 2013, 15:39 [IST]
Other articles published on Dec 19, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+