For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவுடனான முதல் டெஸ்ட் - இன்னிங்ஸ், 6 ரன் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி

By Staff

நாக்பூரில்: நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, இந்தியாவை, ஒரு இன்னிங்ஸ், 6 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்காவும், இந்தியாவும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்தது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 558 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

பின்னர் ஆடிய இந்தியா, தனது முதல் இன்னிங்ஸை 233 ரன்களுக்கு இழந்தது. ஷேவாக் சதமடித்தார். பத்ரிநாத் அரை சதம் போட்டார். முன்னணி வீரர்கள் சொதப்பியதால் இந்தியாவால் பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் போய் பாலோ ஆன் வாங்கியது.

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் ஸ்டெயின் 7 விக்கெட்களை வீழ்த்தினார்.

2வது இன்னிங்ஸில் கம்பீர், ஷேவாக் உள்ளிட்டோர் சொதப்பினர். சச்சின் டெண்டுல்கர் சரியாக 100 ரன்கள் அடித்தார். ஹர்பஜன் சிங் 39 ரன்கள் சேர்த்தார்.

முரளி விஜய் கிருஷ்ணா 32, டோணி 25, சாஹா 36, ஜாகிர் கான் 33 ரன்கள் எடுத்தனர். இறுதியில், 319 ரன்களில் இந்தியா ஆல் அவுட் ஆகி படு தோல்வியைச் சந்தித்தது.

ஸ்டெயின், பால் ஹாரிஸ் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

ஆட்ட நாயகனாக முதல் இன்னிங்ஸில் அபாரமாக அடி 253 ரன்களைக் குவித்த தென் ஆப்பிரிக்க வீரர் அம்லா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது தென் ஆப்பிரிக்கா.

Story first published: Wednesday, December 7, 2011, 18:35 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+