Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்டெயினுக்கு தொண்டையில் "பெயின்" + மூக்கடைப்பு....இந்தியாவுக்கு எதிராக இறங்குவது டவுட்!

மெல்போரன்: மூக்கடைப்பு, தொண்டை வலி, காய்ச்சலுடன் அவதிப்படும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களில் முதல் வரிசையில் உள்ளவர். 97 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டெயின், 152 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

காய்ச்சலால் பாதிப்பு

காய்ச்சலால் பாதிப்பு

உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களும் ஸ்டெயினை எதிர்கொள்ளும்போது மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளனர். இந்நிலையில், ஃபுளூ காய்ச்சல் காரணமாக ஸ்டெயின் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரன்னை வழங்கிய ஸ்டெயின்

ரன்னை வழங்கிய ஸ்டெயின்

தென் ஆப்பிரிக்கா உலக கோப்பையில், தனது முதல் போட்டியில் ஜிம்பாப்வேவை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆனால் 9 ஓவர்கள் வீசிய ஸ்டெயின் 64 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டைதான் வீழ்த்த முடிந்தது. ஜிம்பாப்வே அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டெயின் அன்று சொதப்ப காரணம், அவரது உடல் நிலைதான் என்று கூறப்படுகிறது,.

மூக்கடைப்பு, தொண்டை வலி..

மூக்கடைப்பு, தொண்டை வலி..

ஃபுளூ காய்ச்சலால் அவித்பப்டும் ஸ்டெயினுக்கு, மூக்கடைப்பு மற்றும் தொண்டை வலியும் சேர்ந்து பாடாய்படுத்தி வருகிறது. ஜிம்பாப்வேக்கு எதிரான பட்டியில் கூட பக்கத்தில் இருந்துதான் ஓடிவந்து பந்தை எறிந்தார் ஸ்டெயின். அதற்கு முந்தைய நாள் பயிற்சியின்போதும் அதிக நேரம் அவர் பந்து வீசவில்லை.

பயிற்சிக்கு வரவில்லை

பயிற்சிக்கு வரவில்லை

இதனிடையே இந்தியாவுக்கு எதிரான போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடக்கிறது. அதற்கான பயிற்சியில் ஸ்டெயின் இதுவரை ஈடுபடவில்லை. அவரின் உடல் பிரச்சினை தொடருவதால்தான் பயிற்சிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு எதிராக ஆடுவது சந்தேகம்

இந்தியாவுக்கு எதிராக ஆடுவது சந்தேகம்

இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணி இதுவரை அதிகாரப்பூர்வமாக ஸ்டெயின் உடல் நிலை பற்றி அறிவிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து பயிற்சிக்கு வராமல் இருந்தால் அவரை இந்தியாவுக்கு எதிரான அணியில் சேர்க்க தென் ஆப்பிரிக்க அணி தயங்கும் என்று கூறப்படுகிறது.

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு

சச்சின் டெண்டுல்கர் சில தினங்கள் முன்பு அளித்த பேட்டியில், ஸ்டெயினிடம் இந்திய பேட்ஸ்மேன்கள் எ்சசரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் ஸ்டெயின் ஒருவேளை விளையாடாவாவிட்டால் அது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ரன் குவிக்க வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என்றே தெரிகிறது.

Story first published: Wednesday, February 18, 2015, 17:43 [IST]
Other articles published on Feb 18, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+