Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏம்ப்பா இப்படி செஞ்சே... ஸ்ரீசாந்த்தை நிற்க வைத்து கேள்வி கேட்ட பொடியன்!

டெல்லி: ஸ்ரீசாந்த் கோர்ட்டுக்குக் கூட்டி வரப்பட்டபோது, அவரிடம் 12 வயது சிறுவன் துஷார், ஏன் இப்படி ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டீர்கள் என்று கேட்டு ஸ்ரீசாந்த்தை அதிர வைத்தான்.

டெல்லி கோர்ட்டுக்கு நேற்று ஸ்ரீசாந்த் கொண்டு வரப்பட்டு மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரைக் காண பெரும் கூட்டம் கூடியிருந்தது. அதில் ஒருவன்தான் 12 வயதான துஷார்.

கோர்ட்டுக்குள் ஸ்ரீசாந்த்துக்கு பின்னால் நின்றி்ருந்தான் துஷார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் கோர்ட்டில் இருந்தார் ஸ்ரீசாந்த்.

என்ன வேண்டும் துஷார்?

என்ன வேண்டும் துஷார்?

அவருடன் எப்படியாவது பேசி விடத் துடித்தான் துஷார். அதைக் கவனித்த ஸ்ரீசாந்த்நேரம் கிடைத்தபோது சிறுவனிடம் திரும்பி, என்ன வேண்டும் என்று துஷாரிடம் பேசினார்.

ஏன் பிக்ஸிங்கில் ஈடுபட்டீர்கள்?

ஏன் பிக்ஸிங்கில் ஈடுபட்டீர்கள்?

இதனால் உற்சாகமடைந்த துஷார், ஸ்ரீசாந்த்திடம் படு தெளிவான குரலில், ஏன் பிக்ஸிங்கில் ஈடுபட்டீர்கள் என்று கேட்டான். இதைக் கேட்டதும் சற்றே அதிர்ச்சி அடைந்தார் ஸ்ரீசாந்த்.

இல்லைப்பா, நான் அதைச் செய்யலே

இல்லைப்பா, நான் அதைச் செய்யலே

இருப்பினும் சுதாரித்த ஸ்ரீசாந்த், இல்லைப்பா, நான் அதைச் செய்யலே என்றார். இருந்தாலும் விடாமல் ஸ்ரீசாந்த்திடம் கேள்விகளை முனுமுனுத்தபடி இருந்தான் துஷார்.

ஆட்டோகிராப் ப்ளீஸ்

ஆட்டோகிராப் ப்ளீஸ்

அதன் பின்னர் அருகில் நின்றபடி செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர்கள் பக்கம் திரும்பிய துஷார், ஒரு செய்தியாளரிடமிருந்து ஸ்கிரிப்ளிங் பேடில் இருந்து ஒரு பேப்பரைக் கிழித்துத் தருமாறு கேட்டான். அவரும் கொடுத்தார். அதை ஸ்ரீசாந்த்திடம் நீட்டி, ஆட்டோகிராப் போட்டுத் தருமாறு கேட்டான் துஷார்.

எனக்காக பிரார்த்திச்சுக்கோ

எனக்காக பிரார்த்திச்சுக்கோ

ஆனால் கோர்ட்டுக்குள் அதெல்லாம் செய்யக் கூடாது என்று ஸ்ரீசாந்த் கூறினார். இருந்தாலும் விடவில்லை சிறுவன். இதையடுத்து வெளியில் வரும்போது போடுகிறேன் என்றார் ஸ்ரீசாந்த். அதன்படி கோர்ட் நடவடிக்கை முடிந்து வெளியே வந்தபோது துஷாரிடமிருந்து பேப்பரை வாங்கிய ஸ்ரீசாந்த், எனக்காக பிரார்த்தனை செய் துஷார் என்று எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.

இவ்வளவு நடந்தும் ஆட்டோகிராப் கேட்கும் அளவில் ஒரு ரசிகன் இருக்கிறான் என்றால்... ஸ்ரீசாந்த் போன்றவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

மீண்டும் 2 நாள் போலீஸ் காவல்

மீண்டும் 2 நாள் போலீஸ் காவல்

முன்னதாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்ரீசாந்த்துக்கு மேலும் 2 நாள் போலீஸ் காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட் அனுஜ் அகர்வால் உத்தரவிட்டார். அதேபோல இன்னொரு வீரரான அஜீத் சண்டிலா, புக்கிகள் சந்திரேஷ் படேல், அஸ்வனி என்கிற திப்பு ஆகியோருக்கும் 2 நாள் காவல் நீட்டிக்கப்ட்டது.

Story first published: Monday, May 27, 2013, 11:05 [IST]
Other articles published on May 27, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+