For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னா ஒரு பவுலிங் மச்சி... 17 பந்து, 10 வைடு, ஒரு நோ பால், ஒரு விக்கெட்.. அம்புட்டுதேன்!

Abhishek Nayar
குவஹாத்தி: அபிஷேக் நய்யார் நல்ல ஒரு பேட்ஸ்மேன் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் பந்து வீச்சில் அவர் இப்படி சொதப்புவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. அப்படி ஒரு அதகளம் செய்து விட்டார்.

தியோதர் கோப்பைக்கான போட்டியில் நேற்று குவஹாத்தியில் நடந்த போட்டியில் தென் மண்டல அணியும், மேற்கு மண்டல அணியம் மோதின. மும்பை வீரரான அபிஷேக் மேற்கு மண்டல அணியில்இடம் பெற்றிருந்தார்.

நேற்று அவர் பவுலிங்கிலும் இறங்கினார். ஆனால் மகா சொதப்பல் சொதப்பி விட்டார் நய்யார். இத்தனைக்கும் பகுதி நேர ஸ்பின்னர்தான் நய்யார். ஆனால் நேற்று அவரது பந்து வீச்சு ரொம்பவே மோசம்.

12வது ஓவரை அவர் வீசினார். ஒரு ஓவருக்கு 6 பந்துகள்தான். ஆனால் நய்யார் வீசிய மோசமான பந்து வீச்சால் அது 17 பந்துகள் கொண்டதாக நீண்டு போனது. முதல் பந்தே வைடு போட்டார் நய்யார். அடுத்தடுத்து வைடு போட்டுக் கொண்டே போக அத்தனை பேரும் ஸ்தம்பித்துப் போனார்கள்.

இப்படியே மொத்தம் 10 வைடுகளைப் போட்டார் நய்யார். அத்தோடு நில்லாமல் ஒரு நோ பால் வேறு... ஆனால் இதில் ஒரே ஒரு பெரிய ஆறுதல் என்னவென்றால் ஒரு விக்கெட்டைத் தூக்கினார் நய்யார் என்பதுதான்.

டெய்ல் பீஸ்...

அபிஷேக் நய்யாரை ரூ.3.5 கோடிக்கு புனே வாரியர்ஸ் அணி தனது ஐபிஎல் போட்டிகளுக்காக ஏலத்தில் எடுத்துள்ளது. இதேபோல ஐபிஎல்லிலும் அவர் பந்து வீசினால்.. வெளங்கிரும்.

Story first published: Wednesday, March 13, 2013, 17:16 [IST]
Other articles published on Mar 13, 2013
English summary
Many consider Abhishek Nayar as a run-machine but on Tuesday, it was not his bat that was doing the scoring. The Mumbai batsman, who is also a part-time right-handed spinner, bowled a 17-ball record-setting over with ten wides and a no-ball!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+