For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரமலான் கோப்பை கிரிக்கெட் தொடர்: அபுதாபி சேலஞ்சர்ஸ் அணி 'சாம்பியன்'

By
Cricket
அபுதாபி: அபுதாபியில் 3வது ரமலான் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில், இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்ற அபுதாபி சேலஞ்சர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.

அபுதாபியில் மேலப்பாளையம் மேப்பர்ஸ் அமைப்பினர் மூலம் 3வது ரமலான் கோப்பைக்கான டுவென்டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. இதில் எம்.எம்.சி.சி, மெல்கோ, இ.டி.ஏ, இ.டி.ஏ.பி.பி.டி மற்றும் அபுதாபி சேலஞ்சர்ஸ் உட்பட மொத்தம் 5 அணிகள் பங்கேற்றன. இதில் சிறப்பாக ஆடிய அபுதாபி சேலஞ்சர்ஸ், எம்.எம்.சி.சி ஆகிய 2 அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின.

கடந்த 28ம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியின் டாஸ் வென்ற எம்.எம்.சி.சி அணி முதல் பேட்டிங் தேர்வு செய்தது. இதில் எம்.எம்.சி.சி அணியின் அன்சாரி சிறப்பாக ஆடி 32 பந்துகளில் 44 ரன்களை எடுத்தார். அதேபோல காஜா முஹைதீன் 30 ரன்களை சேர்த்தார். மேலும் சாந்து செய்யது, சிவராஜ், தப்ரே ஆலம் மற்றும் அபுதாகிர் ஆகியோர் சிறப்பாக ஆடினர்.

இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எம்.எம்.சி.சி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை குவித்தது. அபுதாபி சேலஞ்சர்ஸ் அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய விப்புல் 4 ஓவர்கள் வீசி 21 ரன்களை கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினர். சுபுஹானி 1 விக்கெட் எடுத்தார்.

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை விரட்டிய அபுதாபி சேலஞ்சர்ஸ் அணி துவக்கம் முதலே சிறப்பாக ஆடியது. பேட்ஸ்மேன் விக்னேஷ் அதிரடியாக ஆடி 40 பந்துகளில் 67 ரன்களை குவித்தார். அதேபோல பந்துவீச்சில் கலக்கிய விப்புள் அதிரடியாக பேட்டிங் செய்து 15 பந்துகளில் 29 ரன்களை எடுத்தார். அணியின் கேப்டன் அசார் 24 பந்துகளில் 27 ரன்களை எடுத்தார்.

விக்கெட்கள் குறிப்பிட்ட இடைவெளியில் இழந்தாலும், அபுதாபி சேலஞ்சர்ஸ் அணி 17.4 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2012ம் ஆண்டின் ரமலான் கோப்பையை, அபுதாபி சேலஞ்சர்ஸ் அணி கைப்பற்றியது.

ரமலான் வின்னர் மற்றும் ரன்னர் கோப்பையை வழங்கும் அல் புட்டிம் குரூப் மேலாளர் சிராஜுதீன், சிறந்த ஆட்டநாயகனுக்கான கோப்பை மற்றும் பரிசை வழங்கும் இ.டி.ஏ மெல்கோ புரோடக்ஸ் துறை உயர் அதிகாரி ஜாபர் மீரான், சிறந்த பந்துவீச்சாளர் கோப்பையை வழங்கும் இ.டி.ஏ. மெல்கோ சர்வீஸ் மற்றும் விற்பனை துறை மேலாளர் முஹம்மது உமர் அன்சாரி, அனைத்து போட்டிகளுக்கும் தொப்பிகளை வழங்கிய இ.டி.ஏ. மெல்கோ இன்ஸ்லேசியன் துறை பொறியாளர் ஜலீல் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

சிறந்த ஆட்டநாயகன் விருதை எம்.எம்.சி.சி அணியை சேர்ந்த அன்சாரிக்கு, இ.டி.ஏ. மெல்கோ புரோடக்ஸ் துறை ஜாபர் மீரான் வழங்கினார். சிறந்த பந்துவீச்சாளர் விருதை பெற்ற எம்.எம்.சி.சி அணி வீரர் அபுதாகிர்க்கு, இ.டி.ஏ. மெல்கோ சர்விஸ் சேல்ஸ் துறை மேலாளர் முஹம்மத் உமர் அன்சாரி கோப்பை மற்றும் பரிசை வழங்கினார். தொடரில் வின்னர் மற்றும் ரன்னர் பரிசை, அல் புட்டிம் குரூப் மேலாளர் சிராஜுதீன் வழங்கினார்.

3வது ரமலான் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரை சிறப்பாக நடத்த உதவிய எம்.எம்.சி.சி அணியை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.காஜா முஹைதீன் மற்றும் எம்.எம்.சி.சி அணியை சேர்ந்த தப்ரே ஆலம் பாதுஷா, சாந்து செய்யது, அபுதாகிர் மற்றும் பீர் முஹம்மது ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Story first published: Thursday, October 11, 2012, 19:00 [IST]
Other articles published on Oct 11, 2012
English summary
Abu Dhabi challenger team has won the Abu Dhabi Ramdan cup. Abu Dhabi challenger team has won the final match against MMCC team.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+