ஒலிம்பிக் போட்டி காண ஏர்-இந்தியா விமானம் ரெடி: சென்னையில் காலை உணவு, லண்டனில் இரவு உணவு

இது குறித்து ஏர்-இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
சென்னையில் இருந்து காலை 8.45 மணிக்கு டெல்லிக்கு ஏர்-இந்தியா விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானம் காலை 11.30 மணிக்கு டெல்லி சென்றடையும். அங்கிருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு, லண்டன் நேரப்படி இரவு 7 மணிக்கு லண்டன் சென்றடையும்.
சென்னையில் இருந்து காலை உணவை முடித்துவிட்டு ஒரு பயணி புறப்பட்டால், இரவு உணவிற்கு லண்டன் சென்றுவிடலாம். இந்த விமானத்தில் சென்னையில் இருந்து லண்டன் சென்று வர, ரூ.59 ஆயிரத்து 435 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது.
சென்னையில் இருந்து மும்பை வழியாகவும், லண்டனுக்கு ஏர்-இந்தியா விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானம் சென்னையில் இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு, லண்டன் நேரப்படி மறுநாள் காலை 11.30 மணிக்கு அங்கு சென்றடையும். இந்த விமானத்தில் லண்டன் சென்று வர, ரூ.51 ஆயிரத்து 468 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பயணிகளுக்கு வசதியாக நவீன ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமான பயணிகளுக்கு சென்னையிலேயே குடியுரிமை, சுங்கத்துறை சோதனைகள் நடத்தப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications