பாக்ஸிங்: உலக சாம்பியனை வீழ்த்திய அகில், காலிறுதியில் ஜித்தேந்தர்!
{image-akhil punches sergey250_16082008.jpg tamil.mykhel.com}பெய்ஜிங்: அகில்குமாரைத் தொடர்ந்து இந்தியாவின் ஜித்தேந்தர் குமாரும் குத்துச்சண்டை காலிறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்தியாவின் பதக்க கனவை பிரகாசப்படுத்தியுள்ளார்.
ஒலிம்பிக் பதக்க நம்பிக்கைகளில் இதுவரை பெரிய அளவில் இடம் பெறாமல் இருந்து வந்த குத்துச்சண்டை இப்போது கவனத்தை ஈர்க்கும் போட்டியாக மாறியுள்ளது.
அகில் குமார், விஜேந்தர் குமார், ஜித்தேந்தர் குமார் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களில் அகில் குமார் நேற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறி அனைவரையும் அசர வைத்துள்ளார். அவர் நேற்றைய போட்டியில் வீழ்த்தியது சாதாரண வீரரை அல்ல, உலக சாம்பியனை.
பேன்டம் வெயிட், 54 கிலோ எடைப் பிரிவில் நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷ்யாவைச் சேர்ந்த, உலகச் சாம்பியன் செர்ஜி ஓடபயனோவை சந்தித்தார் அகில் குமார்.
மிகவும் விறுவிறுப்பாக இருந்த இந்தப் போட்டியில் அகில் குமார் அதிரடியாக ஆடி செர்ஜிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். சீட்டின் நுனிக்கு அனைவரையும் கொண்டு வந்த இந்த விறுவிறுப்பான போட்டியில் அகில் குமார், செர்ஜியை வீழ்த்தி சாதனை படைத்தார்.
ஆரம்பத்தில் அகில் குமார் 2-6 கணக்கில் பின்தங்கித்தான் இருந்தார். ஆனால் திடீரென சீறி எழுந்தது இந்த ஹரியாணா சிங்கம். கடைசி நிமிடங்களில் விறுவிறுவென புள்ளிகளைக் குவித்தார்.
கடைசி ரவுண்டில் செர்ஜிக்கு அவர் கொடுத்த இரண்டு குத்துக்கள் புள்ளிகளை வார உதவியது. கடைசிச் சுற்றின் முடிவில் இரு வீரர்களும் 9-9 என்ற சம நிலையில் இருந்தனர். இதையடுத்து புள்ளிகள் அடிப்படையில், அகில் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றி குறித்து அகில் குமார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது எளிதான போட்டி இல்லை. உலக சாம்பியனை வீழ்த்துவது மிகவும் கஷ்டமான காரியம், இதை நான் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் நான் தோற்க மாட்டேன் என்ற நம்பிக்கை இருந்தது.
தங்கம் கிடைக்கும் என நான் உறுதியாக சொல்ல மாட்டேன். ஆனால் தங்கம் வெல்லத்தான் நான் வந்துள்ளேன் என்பதை மட்டும் உறுதியாக சொல்லிக் கொள்கிறேன் என்றார் நம்பிக்கையுடன்.
அடுத்து காலிறுதிப் போட்டியில், மால்டோவா வீரர் வாசிலேவ் கோஜனை சந்திக்கவுள்ளார் அகில். இப்போட்டி 18ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஜித்தேந்தர் குமார் அபாரம்:
இந்த நிலையில் ஜித்தேந்தர் குமார் இன்று 51 கிலோ பிளை பிரிவின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மிகச் சிறப்பாக விளையாடிய அவர் உஸ்பெகிஸ்தான் வீரர் துலஷோய் டோனியோராயை 13-6 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இவரும் ஹரியாணாவைச் ேசர்ந்தவர்தான். மிகச் சிறப்பாக விளையாடிய ஜித்தேந்தர், டோனியோராயை அனைத்து வகையிலும் பின்தங்கச் செய்து விட்டார். எந்த ஒரு கட்டத்திலும் உஸ்பெக் வீரரை தலை தூக்கவே விடவில்லை ஜித்தேந்தர்.
தனது வெற்றியை அகில் குமாருக்கு காணிக்கையாக்குவதாக ஜித்தேந்தர் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு அகில்தான் எல்லாமே. எனது நண்பர், வழிகாட்டி, தந்தை, தாய், சகோதரர் எல்லாமே அவர்தான். இந்த வெற்றியை அவருக்கு அர்ப்பணிக்கிறேன் என்றார் ஜித்தேந்தர்.
குத்துச்சண்டையில் இரு இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறியிருப்பதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பதற்கான வாய்ப்பை அதிகரிப்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications