தாலிபான் தாக்குதல்-நூலிழையில் உயிர்தப்பிய பிளின்டாப்

இங்கிலாந்து கிரிக்கெட் நட்சத்திரம் பிளின்டாப், கேரி லினேகர் என்ற முன்னாள் இங்கிலாந்து கால்பந்து வீரர் இருவரும் டெய்லி மிரர் பிரைடு ஆப் பிரிட்டன் என்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்க ஆப்கானிஸ்தான் சென்றனர்.
அவர்கள் காந்தகார் நகரில் இருக்கும் ஒரு விமான தளத்தில் நடந்த இரவு விருந்தில் கலந்து கொண்டனர். விருந்தின் போது திடீரென்று அபாய மணி அலறியது.
இதை தொடர்ந்து தாலிபான் ஏவுகணை ஒன்று விருந்து நடக்கும் இடத்தை நோக்கி வருவதாகவும், 30 வினாடிகளில் அது தாக்கலாம் என்பதால் விருந்தில் பங்கேற்ற அனைவரும் மேஜைக்கு அடியில் சென்று பதுங்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
முதலில் இது புரியாமல் விழித்த பிளின்டாப் மற்றவர்கள் அனைவரும் விருந்து மேஜைக்கு அடியில் செல்வதை பார்த்து, அவரும் உள்ளே சென்று ஒளிந்துகொண்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் காயமின்றி தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து பிளின்டாப் கூறுகையில்,
இதனால் பீதி பெரும் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக நடப்பது எல்லாம் உயிருக்கு ஆபத்தானவையாக இருக்கிறது. இந்த சம்பவங்களை பத்திரிகையில் படிப்பது எளிது. ஆனால், இங்கு இருப்பது மிகவும் கடினமானது. வீரர்கள் தங்களது நாட்டுக்காக பெரிய தியாகங்களை செய்து வருகின்றனர்.
நான் நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். இங்கே வீரர்கள் நாட்டுக்காக போராடி கொண்டிருக்கிறார்கள் என்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:31 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications