மோசமாக தாவி அஞ்சு பாபி ஜார்ஜ் அவுட்!

ஒலிம்பிக் தடகளம், மகளிர் நீளம் தாண்டுதல் பிரிவில் இன்று காலை தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்தன. இதில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக அஞ்சு பாபி ஜார்ஜ் கலந்து கொண்டார்.
முதல் சுற்றில் அவர் தாண்டிய போது நல்ல தூரத்திற்குத் தாண்டினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது பால்ட் ஆகி விட்டது. சோகமடைந்த அஞ்சு, 2வது சுற்றில் நம்பிக்கையுடன் தாண்டினார். ஆனால் அதுவும் பால்ட் ஆகி விட்டது.
இந்த நிலையில் கடைசி வாய்ப்பான 3வது வாய்ப்பில் அவர் முழு வேகத்துடன் தாண்டினார். ஆனால் பேரதிர்ச்சியாக இதுவும் பால்ட் ஆகவே, போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் அஞ்சு.
தகுதிச் சுற்றிலேயே தோல்வி அடைந்ததால் அதிர்ச்சிக்குள்ளான அஞ்சு பாபி ஜார்ஜ் மைதானத்திலேயே சில விநாடிகள் சோகத்துடன் அமர்ந்து விட்டார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications