லண்டன் ஒலிம்பிக் போட்டி: இந்திய ஆடவர் வில்வித்தை அணி தகுதி பெற்றது

அமெரிக்காவின் ஓஜ்டென் நகரில் ஒலிம்பிக் போட்டிக்கான வில் வித்தை தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் ஜெயந்தா தலுக்தர், ராகுல் பானர்ஜி, தருண் தீப் ராய் ஆகிய மூவரைக் கொண்ட வில்வித்தை அணி விளையாடி வருகிறது.
நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 221-209 என்ற புள்ளிகளில் வீழ்த்தி இந்தியது இந்திய அணி.
இந்தியாவின் மகளிர் வில்வித்தை அணி ஏற்கெனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மகளிர் அணியில் தீபிகா குமாரி, லைஸ்ராம் தேவி, செக்ரோவ்லு ஆகியோர் இடம் பிடித்துள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னமும் 36 நாட்களே உள்ளது குறிப்பிடத்தக்கது.
Story first published: Friday, June 22, 2012, 15:10 [IST]
Other articles published on Jun 22, 2012


Click it and Unblock the Notifications