For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வில்வித்தை உலக கோப்பை போட்டி: இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம்

By
London Olympics 2012
ஒக்டென்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக கோப்பை வில்வித்தை (3ம் நிலை) போட்டியில், இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஒக்டென் பகுதியில் உலக கோப்பை வில்வித்தை (3ம் நிலை) போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் தருண்தீப் ராய், ஜெயந்த் தலுத்டர், ராகுல் பானர்ஜி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அமெரிக்கா அணிக்கு எதிரான எதிரான இறுதிப் போட்டியில், இந்திய அணி 213 புள்ளிகளுடன் சமநிலை பெற்றது.

இதனையடுத்து டை பிரேக்கரில் இந்தியா, அமெரிக்கா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. அமெரிக்கா வீரர்கள் எய்த 10 அம்புகளும் துல்லியமாக இருந்த நிலையில், இந்திய வீரர்களின் 9 அம்புகள் மட்டுமே துல்லியமாக இருந்தன. இதனால் 27-28 என்ற புள்ளிக் கணக்கில் அமெரிக்கா வெற்றிப் பெற்று, தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. நூலிழையில் தோல்வி அடைந்த இந்திய அணி வெள்ளிப் பதக்கம் பெற்றது.

அடுத்த மாதம் லண்டன் ஒலிம்பிக் போட்டி துவங்க உள்ள நிலையில், இந்திய வில்வித்தை வீரர்கள் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, June 26, 2012, 12:15 [IST]
Other articles published on Jun 26, 2012
English summary
Having secured the Olympic berth in the men’s team event, India narrowly lost to hosts U.S. under gusty wind conditions in Ogden (USA) to settle for a silver medal and conclude their campaign in the Archery World Cup Stage III.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+