தமிழக அரசு மறுப்பு எதிரொலி- ஆசிய தடகள போட்டிகள் சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் படுகொலை செய்த சம்பவம் கடந்த பிப்ரவரியில் தமிழகத்தை உலுக்கியது. அப்போது ஈழத் தமிழர்களை படுகொலை செய்த இலங்கையின் வீரர்கள் பங்கேற்றால் சென்னையில் ஆசிய தடகளப் போட்டியை தமிழக அரசு நடத்தாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தடகளக் கூட்டமைப்பின் தலைவர் அடில் சுமரிவாலா, ஆசிய தடகளப் போட்டிகள் சென்னை நகரிலிருந்து புனே நகருக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. வரும் ஜூலை 3 ந் தேதி முதல் முதல் 7 ந் தேதி வரை புனே நகரில் இந்தப் போட்டிகள் நடைபெற இருக்கிறது என்றார்.
Story first published: Thursday, May 30, 2013, 13:56 [IST]
Other articles published on May 30, 2013


Click it and Unblock the Notifications