Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெளிநாட்டவரை திருமணம் செய்ததால் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்த லிதுவேனியா வீராங்கனை

Donata Rimsaite
மாஸ்கோ: கடந்த ஒலிம்பிக் போட்டியில் லிதுவேனியா நாட்டிற்காக பென்டதன் விளையாட்டில் பங்கேற்ற வீராங்கனை, கடந்த ஆண்டு ரஷ்யரை திருமணம் செய்தார். இதனால் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு அவரை அனுப்ப லிதுவேனியா ஒலிம்பிக் கமிட்டி மறுத்துவிட்டது.

லண்டன் ஒலிம்பிக் போட்டி நாளை கோலாகல துவக்க விழாவுடன் துவங்க உள்ளது. இதில் 204 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் வெளிநாட்டவரை திருமணம் செய்ததால், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க பென்டதன் வீராங்கனை ஒருவருக்கு, லிதுவேனியா ஒலிம்பிக் கமிட்டி மறுப்பு தெரிவித்துள்ளது.

லிதுவேனியா நாட்டை சேர்ந்தவர் டுனடா ரிம்சையிட். இவர் ஒரு பென்டதன் வீராங்கனை. பென்டதன் என்பது உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டெறிதல், தடை தாண்டுதல் போன்ற 5 போட்டிகளை ஒரே போட்டியாக விளையாடுவது ஆகும்.

இவர் பென்டதன் விளையாட்டில் கடந்த 2008, 2009 ஆண்டுகளில் உலக கோப்பை வென்றவர். மேலும் கடந்த ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார். இதன் மூலம் பென்டதன் சர்வதேச தரவரிசையில் தற்போது 19வது இடத்தில் டுனடா உள்ளார்.

கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் டுனடா, லிதுவேனியா நாட்டிற்காக விளையாடினார். ஆனால் கடந்த ஆண்டு ரஷ்ய நாட்டவர் ஒருவரை திருமணம் செய்தார். இதனால் இவருக்கு ரஷ்ய குடியரிமை கிடைத்தது.

இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் லிதுவேனியா அணியில் இருந்து டுனடாவின் பெயரை அந்நாட்டு ஒலிம்பிக் கமிட்டி நீக்கியது. இதை எதிர்த்து வழக்கு தொடர டுனடா முடிவு செய்துள்ளார்.

Story first published: Thursday, July 26, 2012, 16:35 [IST]
Other articles published on Jul 26, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+