Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விரல் நகங்களில் தேசம்... ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகளின் தேசப்பற்று!

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் பல வீரர்கள், வீராங்கனைகள் தங்களது தேசப்பற்றை விரல் நகங்களில் வெளிப்படுத்தி கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.

சர்வதேசமும் சங்கமிக்கும் ஓரிடம்தான் ஒலி்ம்பிக் போட்டிகள். ஏதென்ஸில் ஆரம்பித்த ஒலிம்பிக் போட்டிகள் இன்று லண்டனுக்கு வந்து நிற்கின்றன. இதற்காக நூற்றுக்கணக்கான வீரர், வீராங்கனைகள் லண்டனில் வந்து குவிந்துள்ளனர்.

இந்த நிலையில் வீரர்களும், வீராங்கனைகளும் தங்களது தேசப்பற்றை பறை சாற்றும் வகையில், விதம் விதமான முறையில் கலக்கி வருகின்றனர். அதில் ஒன்றாக, விரல் நகங்களில் தங்களது நாட்டின் தேசியக் கொடியை நெயில் பாலிஷ் மூலம் வரைந்து அசத்திக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்க டென்னிஸ் கவர்ச்சிப் புயல் வீனஸ் வில்லியம்ஸ், தனது விரல் நகங்களில் அமெரிக்க தேசியக் கொடியின் நிறத்தை இடம் பெற வைத்துள்ளார். அமெரிக்க தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள அனைத்து நிறங்களும் அவரது நகங்களில் ஜம்மென்று உட்கார்ந்துள்ளன. இதன் மூலம் மேலும் தூக்கலாக தெரிகிறார் வீனஸ்.

இதேபோல ஹங்கி நீச்சல் வீராங்கனை சுஸானா ஜேக்கபஸ் தனது நாட்டு தேசியக் கொடியை விரல் நகங்களில் விளையாட வைத்துள்ளார். இங்கிலாந்து வீரர் ஆலிசன் வில்லியம்சன் தனது விரல் நகங்களில் தேசியக் கொடியான யூனியன் ஜாக்கை அப்படியே இடம் பெயர்த்துக் கொண்டு வந்துள்ளார்.

இப்படிப் பலரும் விதம் விதமான முறையில் தங்களது நகங்கள் மூலம், உடைகள் மூலம், தலை முடியலங்காரம் மூலம் தேசப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஏதாவது மெடல் வாங்கினால் சரித்தான்...!

Story first published: Friday, July 27, 2012, 17:28 [IST]
Other articles published on Jul 27, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+