உசேன் போல்ட் ரொம்ப ஸ்பீடு… மீண்டும் நிரூபித்தார்

மாஸ்கோவில் நடந்து வரும் உலக தடகளப் போட்டியில்தான் இந்த சாதனையைப் படைத்தார் போல்ட்.
நேற்று நடந்த 100 மீட்டர் ஆடவர் ஓட்டப் போட்டியில் உசேன் போல்ட், 9.77 விநாடிகளில் இலக்கைக் கடந்து மின்னல் வேகத்தில் வந்து உலகின் அதி வேகமான மனிதராக வெற்றி பெற்றார் போல்ட்.
உலக தடகள சாம்பியன் போட்டியில் தவறாக தொடங்கியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் போல்ட். ஆனால் இந்த முறை விட்ட பெருமையை மீட்டார்.
போட்டி நடந்த கன மழை பெய்தபோதும் கூட அதைப் பொருட்படுத்தாமல் வீரர்கள் ஓடினர் என்பது குறிப்பிடத்தக்து.
அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் 9.85 விநாடிகளில் ஓடி 2வது இடத்தையும், ஜமைக்காவின் நெஸ்டா கார்ட்டர் 9.95 விநாடிகளில் ஓடி 3வது இடத்தையும் பிடித்தனர்.
Story first published: Monday, August 12, 2013, 15:35 [IST]
Other articles published on Aug 12, 2013


Click it and Unblock the Notifications