Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்பப்ப ரிலாக்ஸ் செய்ய '50 ஷேட்ஸ் ஆப் கிரே' படிக்கும் ஆஸி. நீச்சல் வீராங்கனைகள்!

Alicia Coutts
லண்டன்: ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனைகள் போட்டியால் ஏற்படும் பதட்டத்தைக் குறைக்கவும், தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளவும் இங்கிலாந்து எழுத்தாளர் இஎல் ஜேம்ஸ் எழுதிய மம்மி போர்ன் நூலான 50 ஷேட்ஸ் ஆப் கிரே நூலை படித்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்களாம்.

அவர் இவர் என்று பாகுபாடில்லாமல் அத்தனை நீச்சல் வீராங்கனைகளும் இந்தப் புத்தகத்தைப் படித்து்ததான் தங்களை கூல் செய்து கொள்கிறார்களாம்.

நீச்சல் குளத்தில் இல்லாத நேரத்தில் இந்தப் புத்தகமும் கையுமாகத்தான் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருக்கிறார்களாம். இந்தப் புத்தகத்திற்கு நீ்ச்சல் வீராங்கனைகள் என்றில்லாமல், பிற வீராங்கனைகள் மத்தியிலும் கூட பேராதரவு காணப்படுவதாக ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி கூறியுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனையும், 200 மீட்டர் தனி நபர் மெட்லி பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான அலிசியா கோட்ஸ் கூறுகையில், அனைத்து வீராங்கனைகளுமே 50 ஷேட்ஸ் ஆப் கிரேதான் படிக்கிறார்கள். அதைப் படிப்பதோடு அதில் உள்ளவற்றை விவாதிக்கவும் செய்கிறோம்.

மான்செஸ்டரிலிருந்து கேம்ஸ் வில்லேஜுக்கு வரும்போதுதான் இந்தப் புத்தகத்தை நாங்கள் வாங்கினோம். அது முதல் புத்தகத்தை கீழே வைக்கவில்லை. போட்டியில் இல்லாத நேரமெல்லாம் புத்தகமும் கையுமாகவே இருக்கிறோம். ரொம்ப திரில்லாக இருக்கிறது இதைப் படிக்கும்போது.

எனது மேனேஜர் கூறும்போது, புத்தகத்தில் உள்ள செக்ஸ் குறித்த விஷயங்களை மறந்து விடு, புத்தகத்தில் பல நல்ல விஷயங்கள் உள்ளன என்று கூறினார். உண்மையில் என்னை இந்தப் புத்தகம் வெகுவாக கவர்ந்து விட்டது. செக்ஸ் மட்டுமல்லாமல், மற்றவையும் கூடத்தான். இதை என்னால் கீழே வைக்கவே முடியவில்லை என்றார்.

மொத்தத்தில் ஒலிம்பிக் போட்டிக்கு வந்த வீராங்கனைகள் மத்தியிலும் 50 ஷேட்ஸ் தீ பற்றிக் கொண்டு விட்டது....

Story first published: Thursday, August 2, 2012, 12:50 [IST]
Other articles published on Aug 2, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+